சூப்பர்மேனாக மாறும் மனிதர்கள்.. 2027ல் என்னவெல்லாம் நடக்கும்? பாபா வாங்கா அதிர்ச்சி கணிப்பு | Baba Vanga 2027 Prediction: Mysterious Disease or Genetic Experiment Could Give Humans Superpowers

Spread the love

International

oi-Vigneshkumar

சோஃபியா: பாபா வாங்கா 2027ஆம் ஆண்டு தொடர்பாக கணித்த விஷயங்கள் குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. அடுத்தாண்டு குறித்த கணிப்புகளில் ஒரு விசித்திரமான கணிப்பை வெளியிட்டிருக்கிறார். அதாவது மர்மமான நோய் அல்லது மரபணு சார்ந்த பரிசோதனை ஒன்றின் காரணமாக சில மனிதர்களுக்கு ‘சூப்பர் ஹியூமன்’ போன்ற சக்திகள் கிடைக்கும் என்பதுதான் அந்த விநோதமான கணிப்பாகும்.

பல்கேரியாவை சேர்ந்த பார்வையற்ற நபர் பாபா வாங்கா.. சிறு வயதிலேயே இவருக்கு கண் பார்வை பறிபோன நிலையில், எதிர்காலத்தை பார்க்கும் ஆற்றலை இவர் பெற்றதாக நம்பப்படுகிறது. கொரோனா தொற்று, இரட்டை கோபுர தாக்குதல், இளவரசி டயானாவின் மரணம் உள்ளிட்ட பல முக்கிய நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்தவர். இதற்கிடையே 2027ம் ஆண்டுக்கான இவரது கணிப்புகள் குறித்த முதற்கட்ட தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.

Baba Vanga India offbeat Baba Vanga 2027 Prediction

2027ல் என்ன நடக்கும்?

பாபா வாங்காவின் 2027 கணிப்புகள் மிகவும் வினோதமானதாக உள்ளது. அதாவது ஒருவிதமான நோய் அல்லது அறிவியல் பரிசோதனை காரணமாக சில மனிதர்களுக்கு அசாதாரண சக்திகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. அந்த சக்திகள் எப்படிப்பட்டதாக இருக்கும், இந்த நிகழ்வு எப்படி நடைபெறும் என்பது குறித்து எந்தவொரு தெளிவான தகவலும் இல்லை.

அதிகளவிலான மக்கள் குறிப்பிட்ட நோயால் பாதிக்கப்பட்டு அல்லது குறிப்பிட்ட ஆய்விற்கு உட்படுத்தப்படும்போது, அவர்களில் ஒரு சிலருக்கு மட்டுமே இந்த ‘சூப்பர் பவர்’ கிடைக்கலாம் என்று அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.

பாபா வாங்கா

2026ஆம் ஆண்டுக்காகவும் பாபா வாங்கா பல்வேறு கணிப்புகளை வெளியிட்டிருந்தார். அதில் பல கணிப்புகள் உண்மையாக நடந்த நிலையில், சில கணிப்புகள் பொய்யாகவும் போய் உள்ளன. புதிய உலக போர், பருவநிலை மாற்றம் காரணமான இயற்கை பேரழிவுகள், தொழில்நுட்பத்தால் ஏற்படும் அச்சுறுத்தல் மற்றும் வேற்று கிரகவாசிகளின் வருகை ஆகியவை இதில் முக்கியமானவை!

குறிப்பாக கிழக்கில் தொடங்கும் போர் மேற்கத்திய நாடுகளுக்கும் பரவும் என அவர் கணித்திருந்தார். அது கிட்டத்தட்ட உண்மையாகிவிட்டது. அதேபோல ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உலக தலைவராக உயர்ந்து, சுப்ரீம் லீடராக உயர்வார் என்றும் பாபா வாங்காவின் கணிப்பு இருந்ததாம். இருப்பினும், ரஷ்யா உக்ரைன் போர் தொடர்ந்து வரும் நிலையில், புதின் இக்கட்டான நிலையில் தான் இருக்கிறார்.

பேரழிவுகள்

2026ஆம் ஆண்டில் இயற்கை பேரழிவுகள் முக்கியமானதாக இருந்தன. வெனிசுலா, கொலம்பியா, ஜப்பான் மற்றும் இந்தோனேசியாவில் ஏற்பட்ட மிக பெரிய நிலநடுக்கங்களும், ஆகஸ்ட் மாதத்தில் நேபாளம் மற்றும் திபெத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கும் இதற்கு உதாரணங்களாக குறிப்பிடப்படுகின்றன. இதை அவர் ஓரளவுக்கு சரியாகவே எச்சரித்திருந்தார்.

செயற்கை நுண்ணறிவு

செயற்கை நுண்ணறிவு காரணமாக உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பல பணிநீக்கங்கள் ஏற்படலாம் என்ற அச்சமும் நிலவுகிறது. இதையும் பாபா வாங்கா ஓரளவுக்கு கணித்திருந்தார். ஆனால், 2026ஆம் ஆண்டுக்கான மற்றொரு முக்கிய கணிப்பான வேற்று கிரகவாசிகளின் வருகை இன்னும் நடக்கவில்லை. வரும் நவம்பர் மாதம் ஒரு மிக பெரிய விண்கலம் பூமிக்கு வருகை தரும் என பாபா வாங்கா கணித்திருந்தார். இது நடக்குமா இல்லையா என்பதை நாம் இப்போது பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

இது ஒரு பக்கம் இருக்க.. 2027ல் மனிதர்கள் சூப்பர்மேன் ஆவார்கள் என்ற கணிப்பே பேசுபொருள் ஆகியுள்ளது. இது நடக்குமா என்பதை நாம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *