"சூழ்நிலைக் கட்டாயத்திற்காக உங்கள் விருப்பங்களை மாற்றிக்கொள்ளக் கூடாது! – ஐஸ்வர்யா ராய் அறிவுரை!

Spread the love

79-வது கான் திரைப்பட விழா நேற்றோடு முடிவடைந்திருக்கிறது. லோரியல் பாரிஸ் பிராண்டின் அம்பாசிடராகப் கான் திரைப்பட விழாவில் பல வருடங்களாக தொடர்ந்து பங்கேற்று வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன்.

இந்தாண்டும் அவருடைய தனித்துவமான காஸ்டியூமில் கலந்துகொண்டிருக்கிறார்.

Aishwarya Rai|நடிகை ஐஸ்வர்யா ராய்
Aishwarya Rai|நடிகை ஐஸ்வர்யா ராய்

அங்கு ஊடகத்தினரிடம் பேசிய ஐஸ்வர்யா ராய் திரைத்துறைக்கு வர விரும்பும் புதிய தலைமுறையினருக்குச் சில வழிகாட்டுதல்களையும், அறிவுரைகளையும் வழங்கியிருக்கிறார்.

அவர், “சினிமாவுக்குள் நுழையும் புதியவர்கள், முதலில் தங்களுக்குள் இருக்கும் உண்மையான ஆர்வம் எது என்பதைத் துல்லியமாகக் கண்டறிய வேண்டும்.

ஏனெனில், உங்களது அந்த ஆர்வம்தான் கடினமான சூழ்நிலைகளிலும் உங்களை முன்னோக்கிச் செல்ல உதவும் அடித்தளமாகும். கலைத்துறையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும், நீங்கள் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்களும் உங்களுடைய சொந்த விருப்பமாக இருக்க வேண்டும்.

ஐஸ்வர்யா ராய்
ஐஸ்வர்யா ராய்

பிறருக்காகவோ அல்லது சூழ்நிலைக் கட்டாயத்திற்காகவோ உங்கள் விருப்பங்களை மாற்றிக்கொள்ளக் கூடாது.

நீங்கள் எதைத் தேர்ந்தெடுத்தாலும், அந்தத் தேர்வுகளுக்கு இறுதிவரை நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்க வேண்டும். அந்த அர்ப்பணிப்புதான் உங்களுக்கான தனி அடையாளத்தை இந்தத் துறையில் பெற்றுத் தரும்” எனப் பேசியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *