செங்கல்பட்டு டிராபிக்.. ஜிஎஸ்டி சாலையில் தவிக்கும் பயணிகள்! ரூ.130 கோடி பஸ் ஸ்டாண்ட் திறப்பு எப்போது | When Will Chengalpattu’s Rs 130 Crore New Bus Stand Open Amid GST Road Traffic Woes?

Spread the love

Tamilnadu

oi-Hema Vandhana

செங்கல்பட்டு: வெளியூர் செல்லும் பேருந்துக்காக காத்திருப்பது ஒருபக்கம் என்றால், செங்கல்பட்டு நகருக்குள் பயணிப்பதே வாகன ஓட்டிகளுக்கு எக்கச்சக்க சவாலாக மாறியிருக்கிறது. நகரின் மையத்தில் பஸ் ஸ்டாண்டும், அரசு போக்குவரத்து பணிமனையும் அருகருகே இருப்பதால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு தரும் என எதிர்பார்க்கப்பட்ட ரூ.130 கோடி மதிப்பிலான புதிய புறநகர் பேருந்து நிலையம் இன்னும் மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. அப்படியானால் எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

செங்கல்பட்டு நகரின் மையப்பகுதியில் பேரறிஞர் அண்ணா புதிய பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இதற்கு எதிரிலேயே அரசு போக்குவரத்து பணிமனையும் அமைந்துள்ளது. மிக குறுகிய சாலையில் 2 இடங்களும் எதிரெதிரே இருப்பதால், பஸ்கள் வந்து செல்லும்போது போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

Chengalpattu New Bus Stand Chengalpattu Traffic GST Road

செங்கல்பட்டு ஜிஎஸ்டி சாலை

முக்கியமாக சாயங்காலம் 6 மணிக்கு பிறகு இந்தப் பிரச்சினை அதிகமாகி விடுகிறது.. பணிமனையிலிருந்து அரசு பஸ்கள் வெளியே வரும்போதும் சரி, இரவு நேரத்தில் மறுபடியும் டிப்போவுக்கு திரும்பும்போதும்சரி, ஜிஎஸ்டி சாலையில் வாகனங்கள் வரிசைக்கட்டி நிற்கின்றன.

டீசல் நிரப்புவதற்காக பஸ்கள் பணிமனைக்குள் சென்று திரும்புவதும், அந்த நேரத்தில் டிராபிக்குக்கு ஒரு முக்கியமாக காரணமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பைக்குகள், கார்கள், வேன்கள் என அத்தனையும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.

வெளியூர் பயணிகளுக்கும் சிக்கல்

அதுமட்டுமல்ல, செங்கல்பட்டு பஸ் ஸ்டாண்டிலிருந்து சென்னை, காஞ்சிபுரம், திருப்பதி, வேலூர், கல்பாக்கம், மாமல்லபுரம், திருப்போரூர், திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் செங்கல்பட்டு மட்டுமல்லாமல் சுற்றுவட்டார கிராமங்களில் வசிக்கும் மக்களும் இந்த பஸ் ஸ்டாண்டுக்குதான் வர வேண்டியிருக்கிறது.. வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் அதிகளவில் வருவதால், பஸ் ஸ்டாண்டில் நெரிசல் ஏற்படுகிறது.

ரூ.130 கோடியில் புதிய பேருந்து நிலையம்

மேற்கண்ட பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு காணும் வகையில்தான், செங்கல்பட்டு நகருக்கு வெளியே புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது.

செங்கல்பட்டு ஆலப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட மலையடி வேண்பாக்கம் பகுதியில், அரசு ஐடிஐ அருகே இந்த பஸ் ஸ்டாண்டு அமைக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் திட்ட நிதியின் கீழ் சுமார் ரூ.130 கோடி செலவில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த புதிய பஸ் ஸ்டாண்டில், பஸ்கள் உள்ளே செல்வதற்கும் வெளியே வருவதற்கும் தனித்தனி வழிகள் அமைக்கப்பட்டுள்ள.. . ஒரே நேரத்தில் பல பஸ்களை நிறுத்தி செல்லும் வகையில் இடவசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது… இதனை தவிர ஷாப்பிங் காம்ப்ளக்ஸுடன் இந்த பஸ் ஸ்டாண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து நேரடியாக ஜிஎஸ்டி சாலையை அடையும் வகையில் அகலமான பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இது இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை.

எப்போது மக்கள் பயன்பாட்டுக்கு வரும்?

புதிய பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வந்தால், செங்கல்பட்டு நகரின் மையப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உதவும். குறிப்பாக அரசு பேருந்துகள் நகருக்குள் வந்து செல்ல வேண்டிய தேவை குறைய வாய்ப்புள்ளது.

ஆனால் புதிய பேருந்து நிலையம் இன்னும் திறக்கப்படாததால் அதன் முழு பயனையும் பொதுமக்களால் பெற முடியவில்லை. கட்டுமான பணிகள் முடிந்த பிறகும் திறப்பு தாமதமாவது பயணிகள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால், புதிய பேருந்து நிலையத்தை எப்போது திறக்கப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து, பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *