செஞ்சி: `கோயிலில் வெள்ளைப் பூ வந்தது… என் மகள் உயிருடன் வருவாள்!’ – நெகிழும் சிறுமியின் தாய்

Spread the love

 விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு – பவானி தம்பதிக்கு விஜயலட்சுமி, ஹேமலதா என இரண்டு மகள்கள். மூத்த மகள் சென்னையில் தங்கி டிப்ளமோ நர்சிங் படித்து வரும் நிலையில், ஹேமலதா அதே பகுதியிலுள்ள அரசுப் பள்ளியில் இரண்டாம் வகுப்புப் படித்து வந்தார். கடந்த அக்டோபர் 11-ம் தேதி சிறுமி ஹேமலதாவுக்குப் பிறந்தநாள்.

அதனால் அக்கம்பக்கத்தில் இருந்த நண்பர்கள் வீட்டுக்குச் சென்ற ஹேமலதா, `இன்னைக்கு எனக்கு ஹேப்பி பர்த்டே, கேக் வெட்டப் போறேன் வாங்க” என்று சிரித்துக் கொண்டே ஆசையாக அழைத்திருக்கிறார். அதன்படி அன்றைய தினம் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பிறந்தநாளைக் கொண்டாடிய ஹேமலதா, இரவு உணவை முடித்துவிட்டு வீட்டிற்குள் தன்னுடைய தாயுடன் தூங்கினார்.

சிறுமியின் தாயிடம் போலீஸார் விசாரணை

சிறுமியின் தாயிடம் போலீஸார் விசாரணை

மறுநாள் 12 ஆம் தேதி காலையில் எழுந்த தாய் பவானி, அருகில் தூங்கிக் கொண்டிருந்த மகளைக் காணவில்லை என்றதும் குழப்பமானார். கிராமத்திலுள்ள குழந்தைகள் சர்வசாதாரணமாக அக்கம்பக்கத்து வீடுகளுக்குச் செல்வார்கள் என்றாலும், அவ்வளவு அதிகாலையில் சென்றிருக்க வாய்ப்பில்லை என்பதால் சிறுமியின் பெயரைச் சொல்லி வீட்டைச் சுற்றித் தேடினார்கள் பெற்றோர்.

அதன்பிறகு சிறுமி வழக்கமாகச் செல்லும் அக்கம்பக்கத்து வீடுகளில் விசாரித்த அவர்கள், ஊர் முழுவதும் தேட ஆரம்பித்தனர். ஆனால் மாயமான ஹேமலதா குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. முதல் நாள் மகிழ்ச்சியாக பிறந்தநாளைக் கொண்டாடிய சிறுமி மறுநாளே காணாமல் போனதால், அதிர்ச்சியில் உறைந்தது கிராமம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *