செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளிக்கு இடைக்கால நிர்வாகி நியமனம்|Vijayakumar Reddy Named Interim Administrator of Chettinad Vidyashram

Spread the love

செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியை நடத்தி வரும் குமார ராஜா முத்தையா பாரம்பரிய கலை மற்றும் கைவினைப் பள்ளியை நிர்வகிக்க புதிய நிர்வாகி ஒருவரை நியமித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

கடந்த மே 2-ம் தேதி, அந்தப் பள்ளியின் பதிவு செய்யப்பட்ட சங்கத்தின் செயலாளர் மீனா முத்தையா காலமானார்.

பள்ளியின் புதிய செயலாளரை நியமிக்க பொதுக்குழுவை கூட்டுவதற்கு முன்பு, டி.ஆர். ராஜ கருப்பன் மற்றும் சி.சொக்கலிங்கம்ம் ஆகியோர் நிர்வாகி குழு கூட்டத்தை நடத்தியுள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம்

இதை எதிர்த்துச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வித்யாஷ்ரம் பள்ளியின் நிர்வாகிகள் தொழிலதிபர் முத்தையா, அவரது மனைவி கீதா முத்தையா மற்றும் இன்னும் ஐந்து பேர் வழக்கு தொடுத்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார், வித்யாஷ்ரம் பள்ளியை தற்காலிகமாக நிர்வகிக்க இடைகால நிர்வாகியாக தொழிலதிபர் P.விஜயகுமார் ரெட்டியை நியமித்துள்ளது.

அடுத்த தீர்ப்பு வரும் வரையும், பள்ளியின் புதிய செயலாளரை நியமிக்கும் வரையிலும் விஜய்குமார் ரெட்டி குமார ராஜா முத்தையா பாரம்பரிய கலை மற்றும் கைவினைப் பள்ளியை நிர்வாகிப்பார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *