தஞ்சாவூர் அருகே உள்ள அம்மன்பேட்டை தெற்கு தெருவைச் சேர்ந்தவர் தளபதி(36). திருவையாறு, நடுக்காவேரி காவல் நிலையத்தின் சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது டாஸ்மாக் கடைகளில் மதுப்பாட்டில்கள் திருடி வந்து ஊருக்குள் கள்ளத்தனமாக விற்பனை செய்தது, டூவீலர் திருட்டு, கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தன்னைப்பற்றி போலீஸாருக்கு தகவல் கொடுத்ததாக கூறி தன்னுடையச் சொந்த ஊரைச் சேர்ந்த டென்னிஸ்ராஜ் என்பவரை சில ஆண்டுகளுக்கு முன்பு தளபதி கொலை செய்த சம்பவம் பலரையும் நடுங்கச் செய்தது. இந்நிலையில், தளபதி தன் பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாட முடிவு செய்துள்ளார். இதற்காக நேற்று இரவு தளபதி மற்றும் அம்மன்பேட்டையை சேர்ந்த தமிழரசன்(27), நிதீஷ்(25), சுதர்சன்(21), நரேன்(18), அபினேஷ் (21) ஆகிய ஆறு பேரும் ஒரே காரில் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு திருவையாறு பகுதிக்கு சென்றுள்ளனர்.