சென்னை: `அவசரத் தேவை’ எனக் கூறி மோசடி; வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் சிக்கியது எப்படி? | Chennai: Fraud on the pretext of ‘urgent need’; How did a single family from the northern state get caught?

Spread the love

இதையடுத்து, அண்ணாநகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் சத்தியராஜ் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். மேலும் சி.சி.டி.வி கேமரா பதிவுகளைக் கொண்டு வடமாநில கும்பலைத் தேடினர். போலீஸாரின் தேடுதல் வேட்டையில் வடமாநில கும்பல் சிக்கியது.

அதைத் தொடர்ந்து அவர்களிடம் விசாரித்தபோது, மோசடியில் ஈடுபட்டது மகாராஷ்டிரா மாநிலம், ஜாலிகன் மாவட்டத்தைச் சேர்ந்த பாலு (49), அவரின் .பிரமிளாபாய்(42), இவர்களின் மகன் பிரவின், (18), உறவினர் தன்ராஜ் (27) ஆகியோர் எனத் தெரியவந்தது.

இவர்கள், சென்னையில் பிரபலமான செல்போன் நிறுவனத்தின் பெயரைச் சொல்லி நூதன முறையில் லோக்கல் தயாரிப்பு மாடல் செல்போன்களை விற்று வந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்களைக் கைது செய்த போலீஸார், 26 போலி செல்போன்கள், 27 சார்ஜர்கள், 9,000 ரூபாய் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இந்தக் கும்பலிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து அண்ணாநகர் போலீஸார் கூறுகையில், “கைது செய்யப்பட்ட வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் மும்பையிலிருந்து டூப்ளிக்கேட் செல்போன்களை மொத்தமாக வாங்கி சென்னைக்கு வந்து அவசரத் தேவை எனக் கூறி நூதன முறையில் விற்று ஏமாற்றியிருக்கிறார்கள். ஆனால் உண்மையிலேயே இவர்கள் விற்ற செல்போன்கள், குறிப்பிட்ட நிறுவனத்தின் தயாரிப்புகள் கிடையாது.

மாறாக அந்த நிறுவனத்தின் பெயரை விலை குறைந்த செல்போன்களில் அச்சிட்டு விற்றிருக்கிறார்கள். முன்பெல்லாம் குறைந்த விலைக்கு ஐ போன் என்று ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டு வந்தது. அந்த ஸ்டைலில்தான் இந்தக் குடும்பமும் செல்போனை விற்றியிருக்கிறது.

கைதான இவர்களைப் போல சென்னைக்கு இன்னும் சிலர் கும்பல், கும்பலாக வந்திருப்பதும் தெரியவந்திருக்கிறது. எனவே இந்தக் கும்பலிடம் செல்போன்களை வாங்கி யாரும் ஏமாற வேண்டாம்” என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *