சென்னை: காதல் விவகாரம்; இளைஞர் கொலை – த.வெ.க ஆதரவாளர், அவரின் குடும்பத்தினர் கைது!

Spread the love

கேளம்பாக்கம் இன்ஸ்பெக்டர் தமிழன்பன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதற்கிடையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிரவீன் அளித்த தகவல், சி.சி.டி.வி கேமரா பதிவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் தனிப்படை போலீஸார், த.வெ.க ஆதரவாளர் ஏழுமலை, அவரின் மகன் கெளதம், ஏழுமலையின் உறவினர் மணிகண்டன், கௌதமின் நண்பர் நந்தீஸ் ஆகிய நான்கு பேரை கைதுசெய்தனர். பிரேத பரிசோதனைக்குப் பிறகு பிரவீனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது பிரவீனின் கொலைக்கு நீதிகேட்டு அவரின் குடும்பத்தினர் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீஸார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

இது குறித்து கேளம்பாக்கம் போலீஸார் கூறுகையில், “கொலை செய்யப்பட்ட பிரவீன், காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இது ஆணவக் கொலை அல்ல. தவறான தகவல்கள் பரபரப்படுகின்றன. சம்பவத்தன்று பிரவீனை ஏழுமலையின் குடும்பத்தினர் மிரட்டியிருக்கிறார்கள். அப்போது நடந்த தகராறில்தான் இந்தக் கொலை நடந்திருக்கிறது. தொடர்ந்து விசாரித்து வருகிறோம்”‘ என்றனர்.

மகளின் காதல் விவகாரத்தில் த.வெ.க ஆதரவாளர் ஏழுமலை குடும்பத்தினர் கொலை வழக்கில் சிக்கியிருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *