சென்னை கோயம்பேடு பார் தகராறு கொலையில் முடிவு: 7 பேர் கைது, பார் சீல்|Sri Lankan Woman Killed After Bar Clash in Chennai Koyambedu

Spread the love

நேற்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் பார் ஒன்றில் தகராறு ஏற்பட்டு, அது கொலையில் முடிந்துள்ளது.

இலங்கையைச் சேர்ந்தவர் யான்சி. இவர் தனது இரண்டு தோழிகளுடன் கோயம்பேட்டில் உள்ள தனியார் பார்க்குச் சென்றுள்ளார்.

சுமன் சக்திவேல் என்பவர் அவரது நண்பர்களுடன் அதே பார்க்கு சென்றுள்ளார்.

இந்த இரண்டு குழுவினருக்கும் பாரில் நடனமாடும் போது பிரச்னை ஏற்பட்டுள்ளது. அது தகராறாக மாற, இரண்டு குழுவினரையும் பவுன்சர்கள் பாரில் இருந்து வெளியேற்றியுள்ளனர்.

மதுபான பார்

மதுபான பார்
கோப்புப் படம்

பார்க்கு வெளியேயும் தகராறு தொடர்ந்துள்ளது. இதனால், அங்கிருந்து பவுன்சர்கள் இரண்டு குழுவினரையும் அனுப்பியுள்ளனர்.

யான்சி அவரது தோழிகளுடன் இருசக்கர வாகனத்தில் கிளம்பியுள்ளார். தனது காரில் கிளம்பிய சுமன் சக்திவேல், யான்சியையும், அவரது தோழிகளையும் ஃபாலோ செய்து மோதியுள்ளார்.

கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட யான்சி சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். அவருடன் சென்ற சிறுமி தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *