அடுத்தது, வீடு ஒரு பக்கம், வேலை பார்க்கும் இடம் ஒரு பக்கம் என இருந்தால், தினசரி போக்குவரத்துப் பயண அலைச்சல் அதிகமாக இருக்கும். அதனால், பெரும்பாலும் வேலை பார்க்கும் இடத்திற்கு அருகாமையில் வீடு அமைப்பது நல்லது.
குழந்தைகளுக்கு பள்ளி, கல்லூரி, தொழில் நுட்ப மையம், மருத்துவ வசதி, பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை அரங்கு அருகிலேயே இருந்தால், அன்றாட பயண நேரம், அதற்காகும் போக்குவரத்து கட்டண செலவுகளைப் பெருமளவில் குறைக்கலாம். குழந்தைகள் மற்றும் முதியோர் தினசரி நீண்ட தூரப் போக்குவரத்து களைப்பு இல்லாமல் இருக்கும்.

பஸ் ஸ்டேன்ட், ரயில்வே ஸ்டேஷன், மெட்ரோ ஸ்டேஷன், விமான நிலையம் போன்றவை எப்போதுமே போக்குவரத்திற்கு அத்தியாவசியமானவை. அதனால், நிலம் அல்லது வீடு அருகாமையில் இவை இடம்பெற்றிருப்பது ஆப்ஷன் அல்ல… அவசியம்.
தரமான தார் சாலை, பூங்காக்கள், கோயில்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், வங்கிகள், ஏ.டி.எம், ஹோட்டல்கள், பலசரக்குக் கடைகள், பொழுது போக்கு, கேளிக்கை அரங்கம், சமுதாயக் கூடம் போன்றவை நிலம் அல்லது வீட்டின் அருகே அமைந்து இருப்பது இப்போது மட்டுமல்ல… எப்போதுமே தேவை.