“பஸ் எல்.இ.டியில் என்ன எழுதியிருக்கிறது’ என்று கேட்டு தகராறு ஆகி, சென்னையில் ஒரு கொலை நடந்துள்ளது.
சென்னை தாம்பரம் பஸ் ஸ்டாண்டில் 25 வயதான இளைஞர் அமர்நாத் 70-G மாநகர பஸ்ஸில் ஏறியுள்ளார்.
அதே பஸ்ஸில் 74 வயதான சந்திரசேகரன் தாம்பரம் MEPZ பஸ் ஸ்டாப்பில் ஏறியிருக்கிறார்.
அமர்நாத் மற்றும் சந்திரசேகரன் அருகருகே அமர்ந்து பயணித்துள்ளனர்.
சில நிமிடங்களில் அமர்நாத் சந்திரசேகரனிடம் பஸ்ஸில் உள்ள எல்.இ.டியில் எந்த இடம் எழுதியிருக்கிறது என்று கேட்டுள்ளார்.

சந்திரசேகரனுக்கு படிக்க தெரியாததால், கண்டக்டரிடம் கேட்க சொல்லியுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து கண்டக்டர் சந்திரசேகரனை வேறு சீட்டில் சென்று அமர கூறியிருக்கிறார்.
அதற்காக சந்திரசேகரன் எழுந்த போது, அவரை அமர்நாத் முகத்திலும், நெஞ்சிலும் தாக்கியுள்ளார். இதில் சந்திரசேகரன் மயங்கி விழுந்துள்ளார்.
உடனே பஸ் நிறுத்தப்பட்டு, சந்திரசேகரனை ஒரு பயணி மருத்துவமனைக்கு ஆட்டோவில் அழைத்து சென்றுள்ளார்.
அவரை சோதித்து பார்த்த மருத்துவர் ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.