FBI: குடிபோதையில் தள்ளாடும் அமெரிக்க FBI இயக்குநர் காஷ் பட்டேல்? குற்றச்சாட்டும் பின்னணியும் என்ன? | U.S. FBI Director Kash Patel Arrested for Urinating in Public While Intoxicated

Spread the love

அமெரிக்காவின் எப்.பி.ஐ இயக்குனராக இருப்பவர் காஷ் பட்டேல். பணி நேரத்தில் மது அருந்துவதாக அவர்மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது மட்டுமல்லாது கல்லூரியில் படித்த காலத்திலேயே மது அருந்தி கைது செய்யப்பட்ட சம்பவங்களும் நடந்து இருப்பதை காஷ் பட்டேல் ஒப்புக்கொண்டுள்ளார்.

காஷ் பட்டேல் தனது சிறுவயதில் நண்பர்களுடன் குடிபோதையில் ஊர் சுற்றியது குறித்து அவர் எழுதிய கடிதம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். அரசு வழக்கறிஞர் ஒருவரின் அலுவலகத்தில் வேலை செய்தபோது தன்னைப் பற்றிய விபரங்கள் குறித்து அவர் 2005ம் ஆண்டு எழுதிய கடிதத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அக்கடிதத்தில், “‘நான் சட்டக்கல்லூரி மாணவனாக இருந்தபோது நியூயார்க் நகரில் இரவில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தோம். அப்போது ரோட்டோரம் சிறுநீர் கழித்தபோது பொது இடத்தில் சிறுநீர் கழித்ததாகக் கூறி கைது செய்தனர்.

காஷ் பட்டேல்

காஷ் பட்டேல்

இது தவிர 2001ம் ஆண்டுக்கு முன்பு கல்லூரியில் கைப்பந்துப் போட்டியை நண்பர்களுடன் சேர்ந்து பார்த்தபோது 21 வயது குறைவான வயதில் மது அருந்தியதாகக் கைது செய்யப்பட்டேன்” என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

அதற்காக அபராதம் கட்டியதாகவும் குறிப்பிட்டு இருந்தார். அதேசமயம் இத்தாலியில் அமெரிக்க ஹாக்கி அணியுடன் சேர்ந்து காஷ் பட்டேல் பீர் குடிப்பது போன்ற வீடியோவும் வைரலானது.

அதே போன்று கடந்த வாரம் ‘தி அட்லாண்டிக்’ என்ற பத்திரிகை வெளியிட்ட ஒரு அறிக்கையில், காஷ் படேலின் அதிகப்படியான குடிப்பழக்கமும், அதிகப்படியாக விடுமுறைகள் எடுப்பதும் அவரது ஊழியர்களைக் கவலைக்குள்ளாக்கி இருப்பதாகக் குறிப்பிட்டு இருந்தது.

மேலும் வாஷிங்டன் மற்றும் லாஸ் வேகாஸில் உள்ள தனியார் கிளப்களில் படேல் வெளிப்படையாக மது அருந்தியதாகவும், இதன் காரணமாக காலை நேரங்களில் நடக்கும் கூட்டங்களை மாற்றி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இது காஷ்பட்டேலுக்குச் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் பணி நேரத்தில் மது அருந்துவது கிடையாது என்று பட்டேல் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தி அட்லாண்டிக் தீய எண்ணத்துடன் செயல்படுவதாக காஷ் பட்டேல் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பட்டேலின் செய்தித் தொடர்பாளர் எரிகா நைட் இது குறித்து வெளியிட்டுள்ள விளக்கத்தில், ”இத்தாக்குதல்கள் இயக்குநர் பட்டேலின் கீழ் FBI எட்டியுள்ள சாதனை அளவிலான வெற்றிகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும் ஒரு செயலாகவும் மட்டுமே உள்ளன” என்று கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *