சென்னை: பிரமாண்டமாய் நடைபெற்ற சலானி ஜுவல்லரி மார்ட்-ன் 13வது ஆண்டு விழா; ஊழியர்களுக்கு சிறப்பு பரிசு

Spread the love

மக்களின் நன்மதிப்பையும் பேராதரவையும் பெற்ற தி.நகர் சலானி ஜுவல்லரி மார்ட்-ன் 13வது ஆண்டு விழா, நேற்று பிரமாண்டமாய் ஹோட்டல் கிராண்ட் செர்டன்-ல் நடைபெற்றது.

​மதுரை மற்றும் பாண்டிச்சேரி கிளைகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வரவழைக்கப் பெற்று, அவர்களுடன் சென்னை கிளை நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

​சிறப்பு விருந்தினர்களாக திரு.ரவி, Ex IPS, திரு.ஐசரி கணேஷ், வேல்ஸ் நிறுவனத்தின் தலைவர், திரு.விக்கிரமராஜா, தலைவர்- வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

​மேடை பேச்சாளர் மதுரை ராமகிருஷ்ணன் அவர்கள், ‘வேலையை காதலி’ என்ற தலைப்பில் பேசி ஊழியர்களை உற்சாகப்படுத்தினார்.

சலானி ஜுவல்லரி மார்ட்-ன் 13வது ஆண்டு விழா
சலானி ஜுவல்லரி மார்ட்-ன் 13வது ஆண்டு விழா

இந்த ஆண்டு விழாவின் ஓர் அங்கமாக, ​56 ஊழியர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது, முத்தாய்ப்பாக நிறுவனத்தின் எட்டு ஊழியர்களுக்கு 15 லட்சம் மதிப்புள்ள பிளாட் (காலி நிலம்) சிறப்பு பரிசாக வழங்கப்பட்டது.

​சிறப்பு பரிசைப் பெற்றவர்கள், ஆனந்த கண்ணீரோடு நன்றி கூறினார்.

​விஜய் டிவி புகழ் திரு. ஈரோடு மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நிகழ்ச்சியை மேலும் சிறப்பித்தார்.

​ஊழியர்கள் அனைவரையும் சலானி ஜுவல்லரி மார்ட் நிறுவனத்தின் தலைவர் திரு.ஜெயந்திலால் சலானி, திருமதி.ஹேமலதா ஜெயந்திலால், நிர்வாக இயக்குநர்கள் திரு.ரிஷப் சலானி, திரு.கௌதம் சலானி, திரு.ஸ்ரீபால் சலானி ஆகியோர் வரவேற்று, இந்த ஆண்டு விழாவை புதியதாய் ஒளிரச் செய்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *