சென்னை: பெண்கள் விடுதிக்குள் புகுந்த எலக்டிரிஷியன் – தூங்கிக் கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை – electrician arrested in woman harassment case

Spread the love

சென்னை, வேளச்சேரி பகுதியிலுள்ள பெண்கள் விடுதியில் 27 வயது பெண் ஒருவர் தங்கி, படித்துவருகிறார். இவர் 17.10.2026-ம் தேதி இரவு விடுதியில் உள்ள அறையில் தோழியுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, 18-ம் தேதி அதிகாலை நேரத்தில் யாரோ ஒருவர் தன்னை தொடுவது போல உணர்ந்து கண்விழித்துப் பார்த்தார். அப்போது ஆண் ஒருவர், அந்தப் பெண்ணின் அருகில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், கூச்சலிட்டார். அதனால் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். விடுதியிலிருந்தவர்கள் அங்கு வந்து என்னவென்று அந்தப் பெண்ணிடம் விசாரித்தனர். அப்போது அவர் தனக்கு நடந்த கொடுமைகளை கூறினார்.

பாலியல் தொல்லை

பாலியல் தொல்லை

இந்தச் சம்பவம் தொடர்பாக வேளச்சேரி காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீஸார், விசாரணை நடத்தினர். விடுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதன்அடிப்படையில் விடுதிக்குள் நள்ளிரவில் நுழைந்து அங்கிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்தது பிரதாப் இளவரசன், (22) எனத் தெரியவந்தது. இதையடுத்து அவரைப்பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த பிரதாப் இளவரசன், வேளச்சேரியில் உள்ள ஆண்கள் விடுதியில் தங்கி, எலக்டிரிஷியன் வேலை செய்து வருவது தெரியவந்தது. சம்பவத்தன்று பெண்கள் விடுதிக்குள் நுழைந்து அங்கிருந்த ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார், சிறையில் அடைத்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *