கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய யூசுப் பதான் அரசியலில் அணி மாறிய சில மாதங்களுக்குள், அவருக்கு குஜராத் அரசாங்கத்திடம் இருந்து ஒரு பரிசு கிடைத்துள்ளது. 2012 ஆம் ஆண்டு முதல் யூசுப் பதான் வதோதராவில் உள்ள தனது வீட்டிற்கு அருகில் உள்ள நிலத்தை அரசிடமிருந்து வாங்க முயன்றார். ஆனால் அவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.யாக இருந்ததால் அவரால் அந்த நிலத்தை பெற முடியவில்லை. இந்த ஆண்டு ஜூன் மாதம், மேற்கு வங்க சட்டமன்ற முடிவுகள் வந்தவுடன், மம்தா பானர்ஜிக்கு எதிராக கிளர்ச்சி செய்து, 20 திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் அணி மாறி தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மாறினர்.

அவர்களில் யூசுப் பதானும் ஒருவர். யூசுப் பதான் 2024 இல் பெர்ஹாம்பூர் மக்களவைத் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளராக யூசுப் பதான் வெற்றி பெற்றார். யூசுப் பதான் விரும்பிய சர்ச்சைக்குரிய நிலம், சுமார் 1,000 சதுர மீட்டர் பரப்பளவில், வதோதராவின் தண்டல்ஜா பகுதியில் உள்ள பதான் குடும்ப வீட்டிற்கு அருகில் அமைந்துள்ளது. அந்த வீட்டில் பதான் சகோதரர்கள் யூசுப் மற்றும் இர்ஃபான் குடும்பம் மற்றும் பெற்றோருடன் வசிக்கின்றனர்.
சர்வதேச கிரிக்கெட் வீரர் என்ற அந்தஸ்தின் காரணமாக பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி, அவர் 2012ம் ஆண்டு அந்த நிலத்தை சொந்தமாக்க முயன்றார். பல வருட சட்ட மற்றும் நிர்வாகச் போராட்டத்திற்கு பிறகு, சர்ச்சைக்குரிய நிலப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மாநில நிர்வாகம் ஒரு திட்டத்தை உருவாக்கி இருக்கிறது.
அதன் படி யூசுப் பதான் சர்வதேச கிரிக்கெட் வீரர் என்ற முறையில் பாதி நிலத்தை அரசாங்கத்திடம் இருந்து பரிசாக பெற உள்ளார். மற்ற பாதிக்கு அவர் ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுக்கவேண்டும். பாதி நிலத்தின் மதிப்பு ரூ.10 கோடியாகும்.
யூசுப் பதான் 2012ம் ஆண்டு பாதுகாப்புக் காரணங்களுக்காக சர்ச்சைக்குறிய அந்த நிலத்தை 99 வருட குத்தகைக்கு கொடுக்கும்படி யூசுப் பதான் கேட்டுக்கொண்டார். ஆரம்பத்தில் உள்ளூர் மாநகராட்சி நிர்வாகம் யூசுப் பதானுக்கு கொடுக்க முடிவு செய்தது. ஆனால் பின்னர் மாநில அரசு அதனை நிராகரித்துவிட்டது. பொதுச் சொத்துக்களுக்கு வெளிப்படையான பொது ஏலம் தேவை என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கையை நிராகரித்தனர். ஆனாலும் அந்த நிலத்தை யூசுப் பதான் தான் பயன்படுத்தி வந்தார்.
பாஜகவால் நடத்தப்படும் வதோதரா மாநகராட்சி நிர்வாகம், 2024 லோக்சபா தேர்தலில் திரிணாமுல் டிக்கெட்டில் யூசுப் பதான் வெற்றி பெற்றவுடன், ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் இருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொண்டது. இந்த நோட்டீசை எதிர்த்து பதான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் உயர்நீதிமன்றம் பதானை கடுமையாக விமர்சித்தது. தற்போது பதான் அணி மாறி இருப்பதால் நிலம் அவருக்கு மாற இருக்கிறது.