சென்னை: போக்சோ வழக்கில் சிக்கிய போலீஸ் எஸ்.ஐ கொலை – ஆண் நண்பருடன் மனைவி சிக்கிய `அதிர்ச்சி’ பின்னணி!

Spread the love

இதுகுறித்து நுங்கம்பாக்கம் போலீஸார் கூறுகையில், “போலீஸ் எஸ்.ஐ ராஜை அவரின் மனைவி செல்வராணியும் செல்வராணியின் ஆண் நண்பர் தேவநாதனும் சேர்ந்து பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்திருப்பது எங்களின் விசாரணையில் தெரியவந்தது. கொலை குறித்து செல்வராணியிடம் விசாரித்தபோது தனக்கும் கணவர் ராஜிக்கும் 26 வயது வித்தியாசம். இதுதான் இந்தக் கொலைக்கு முக்கிய காரணம் என்று கூறினார். மேலும் செல்வராணி கூறிய இன்னொரு தகவல் எங்களை அதிர்ச்சியடைய வைத்தது. அதுதொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருகிறோம்”‘என்றனர்.

இந்த வழக்கு குறித்து விசாரணை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, “கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்.ஐ ராஜ், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் 1992-ல் காவலராகப் பணியில் சேர்ந்தார். தற்போது சென்னை மாநகர ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவில் எஸ்.ஐ.யாகப் பணியாற்றி வந்தார். இவரின் மனைவி செல்வராணி. இவருக்கு ஏற்கெனவே வேறு ஒருவருடன் திருமணமாகி அவரைப் பிரிந்து ஒரு குழந்தையுடன் தனியாக வாழ்ந்து வந்தார். செல்வராணியை திருமணம் செய்து கொண்ட போலீஸ் எஸ்.ஐ ராஜ், அவரோடு சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. இந்தநிலையில் செல்வராணி, வழக்கறிஞருக்குப் படிக்க ஆசைப்பட்டதால், அவரை திருமணத்துக்குப் பிறகு ராஜ் படிக்க வைத்தார். இந்தச் சமயத்தில்தான் ராஜிக்கும் செல்வராணிக்கும் வயது வித்தியாசம் காரணமாக தாம்பத்யம் தொடர்பாக சில பிரச்னைகள் ஏற்பட்டிருக்கின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *