சென்னை மாணவர்கள் போராட்டம்: வலுகட்டாயமாக அப்புறப்படுத்தை காவல்துறை; களத்தில் என்ன நடந்தது? | Chennai student protest: Police forcibly remove protesters.

Spread the love

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு குளறுபடிக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சியினர் இரவிலும் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

அதேபோல, தமிழ்நாட்டிலும் ஜூலை 22-ந் தேதி நள்ளிரவிலும் நீட் எதிர்ப்புப் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்களும் இளைஞர்களும் திரண்டு இரவிலும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை மாணவர்கள் போராட்டம்

சென்னை மாணவர்கள் போராட்டம்

சென்னையில் எழும்பூர் பகுதியில் இரவில் காத்திருப்புப் போராட்டம் நடத்த முயன்ற மாணவர்கள் மற்றும் இளைஞர்களைக் காவல்துறையினர் குண்டுக்கட்டாகக் கைது செய்தனர்.

இதேபோல, மதுரையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) மற்றும் இந்திய மாணவர் சங்கம் (SFI) சார்பில் தமுக்கம் மைதானத்தில் உள்ள தமிழன்னை சிலை அருகே காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்திற்கு அனுமதி மறுத்த காவல்துறையினர், பங்கேற்றவர்களை விரட்டி விரட்டி வலுக்கட்டாயமாகக் கைது செய்திருக்கின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *