சென்னை மாநகராட்சியின் ரிப்பன் பில்டிங்கில் ஜூலை மாதத்துக்கான மாமன்றக் கூட்டம் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் விசிக கவுன்சிலர் கோபிநாத், மாநகராட்சி மாமன்ற அரங்கில் அம்பேத்கர் படம் ஓரங்கட்டப்படுவதாக மனம் வருந்தி பேசியிருக்கிறார்.

நேரமில்லா நேரத்தில் பேசிய விசிக கவுன்சிலர் கோபிநாத், “மாமன்றக் கூட்ட அரங்கில் சில மாதங்களுக்கு முன்பு வரை அம்பேத்கரின் புகைப்படம் மேயர் அமர்ந்திருக்கும் முகப்பு பக்கத்தில் மாட்டப்பட்டிருந்தது. ஆனால், இப்போது முதல்வர், முன்னாள் முதல்வரின் படத்தை மாட்டுவதற்காக அம்பேத்கரின் படத்தை மட்டும் கழற்றி மாமன்றக் கூட்டத்தின் ஒரு மூலையில் மாட்டியிருக்கிறார்கள்.