‘ஆர்த்தோ டாக்டர்களுடன் சட்டமன்றத்தை நடத்த வேண்டியிருக்கும்!’ – முதல்வரை எச்சரித்த திமுக கவுன்சுலர்! |”‘We’ll Have to Run the Assembly with Orthopaedic Doctors!’ – DMK Councillor Warns CM Over Rising Tensions”

Spread the love

அடுத்ததாக பேசுகையில் முன்னாள் முதல்வர் ஸ்டாலினையும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினையும் புகழும் விதத்தில் முதல்வர் விஜய்யை எதிர்த்து பேசினார். ‘எந்தத் தலைவனும் தன்னுடைய தொண்டன் சாவதை விரும்பமாட்டான் என பெருந்தன்மையோடு எங்கள் தலைவன் பேசியதால்தான் சிலர் சிறை செல்லாமல் தப்பினர். முதல்வர் சட்டமன்றத்தின் கதவுகளை மூடிவிட்டு கூட்டத்தை நடத்த வேண்டும் என்கிறார். அப்படி பூட்டி விட முடியுமா? அது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் அரங்கம். அதை முதல்வர் மூடிவிடுவாரா? அப்படி மூடினால் 5-6 ஆர்த்தோ டாக்டர்களுடன்தான் சட்டமன்றத்தை நடத்த வேண்டியிருக்கும்.

ஊரான் வீட்டு நெய்யில் ஸ்வீட் செய்யும் விதமாக நம்முடைய திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டிருக்கிறார். மூன்று மாதங்களில் அவரின் சாயம் வெளுத்துவிட்டது. அரசு ஊழியர்களின் சுதந்திரமே பறிபோய் விட்டது. 500 ரூபாயை சட்டைப் பையில் வைத்திருந்தால் அந்த 500 ரூபாய் எப்படி வந்தது என கேட்கிறார்கள். அரசு ஊழியர்கள் மன உளைச்சலில் இருக்கிறார்கள்’ என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *