Last Updated:
Chennai Metro Rail Phase 2 | மாநிலங்களவையில் கோவா மாநில பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சதானந்த ஷெட் தனவாடே, நாட்டில் அனுமதிக்கப்பட்ட பல்வேறு மெட்ரோ ரயில் திட்டங்களின் நிலை என்ன எனவும் அவற்றின் பணிகளின் முன்னேற்றம், நிதி ஒதுக்கீடு மற்றும் கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு வழங்கிய நிதிகள் குறித்து கேள்வி எழுப்பினார்.
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில் ஜூன் மாதம் வரை 54.62 சதவீதம் மட்டுமே பணிகள் நிறைவடைந்துள்ளதாக மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான மத்திய இணையமைச்சர் ஸ்ரீ டோகன் சாகு தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் கோவா மாநில பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சதானந்த ஷெட் தனவாடே, நாட்டில் அனுமதிக்கப்பட்ட பல்வேறு மெட்ரோ ரயில் திட்டங்களின் நிலை என்ன எனவும் அவற்றின் பணிகளின் முன்னேற்றம், நிதி ஒதுக்கீடு மற்றும் கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு வழங்கிய நிதிகள் குறித்து கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான மத்திய இணையமைச்சர் ஸ்ரீ டோகன் சாகு, நிதி ஒதுக்கீட்டை பொறுத்த வரை 2024 – 2025 மற்றும் 2025 – 2026 ஆகிய நிதியாண்டுகளில் மத்திய அரசு முறையே ரூபாய் 5,554.15 கோடி மற்றும் ரூபாய் 8,991.76 கோடியை ஒதுக்கி விடுவித்துள்ளது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
