சமவேலைக்கு சம ஊதியம் உட்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரத்துக்கும் மேட்பட்ட செவிலியர்கள் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே போராட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து, செவிலியர்களின் போராட்டத்துக்கு திமுக ஆதரவு தெரிவிக்கும் விதமாக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜூம் போராட்டத்துக்கு நேரில் ஆதரவு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நேற்று இரவு போராட்டக்காரர்கள் வலுகட்டாயமாக கைது செய்ய முயற்சிக்கப்பட்டது. அதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்துவருகின்றன.
இதற்கிடையில், `நவம்பர் 3ஆம் தேதிக்குள் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் மீண்டும் போராட்டம் தொடரும்” என்ற எச்சரிக்கையுடன் செவிலியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

செவிலியர்கள் மீதான நடவடிக்கைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில், “கண்துடைப்புக்கு வழங்கிய வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு, முதுகில் குத்தும் த.வெ.க. அரசின் துரோகத்திற்குச் செவிலியர்கள்தான் தற்போதைய இரையா? பணி நிரந்தரம், பணிப் பாதுகாப்பு, சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட தங்களது வாழ்வாதார உரிமைகளுக்காக அறவழியில் போராடிய செவிலியர்களைக் காவல்துறையைக் கொண்டு கைது செய்த த.வெ.க. அரசின் அராஜக நடவடிக்கைக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.