சேலம்: விறகு வியாபாரியின் மகள் காமன்வெல்த் வாள்வீச்சில் வரலாற்றுச் சாதனை! யார் இந்த கனகலட்சுமி -salam women won gold medal in nigeria commonwealth .

Spread the love

சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்தவர் பரஞ்சோதி. விறகு வியாபாரியான இவரின் மகள் கனகலட்சுமி வாள்வீச்சில் திறமை வாய்ந்த வீராங்கனையாக சிறு வயது முதலே களமாடி வருகிறார். தமிழ்நாடு அளவில் நடைபெற்ற வாள்வீச்சு போட்டிகள் பலவற்றிலும் பங்கேற்று பதக்கங்களைக் குவித்து சாதனைப் படைத்து வருகிறார்.

இந்த நிலையில், அண்மையில் நைஜீரியாவில் நடைபெற்ற காமன்வெல்த் வாள்வீச்சு விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கனகலட்சுமிக்கு கிடைத்திருக்கிறது. சர்வதேச போட்டியில் பங்கேற்ற கனகலட்சுமி, தனது தனித்துவமான வாள்வீச்சு திறமையால் அனைத்து சுற்றுக்களிலும் தொடர்ந்து முன்னேறி வந்திருக்கிறார்.

தங்கம் வென்ற கனகலட்சுமி

தங்கம் வென்ற கனகலட்சுமி

அரையிறுதியில் இங்கிலாந்து வீராங்கனைகளை வீழ்த்தி முன்னேறிய நிலையில், இறுதிப் போட்டியில் சக வீராங்கனையான ஆஷிதாவை 15-13 என்ற கணக்கில் தோற்கடித்து மூத்தோருக்கான மகளிர் வாள்வீச்சில் தங்கம் வென்றிருக்கிறார் கனகலட்சுமி.

இந்தப் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்கிற வரலாற்று சாதனையைப் படைத்திருக்கிறார். வாழப்பாடியைச் சேர்ந்த விறகு வியாபாரியின் மகள் நைஜீரிய காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ள நிலையில், அவருக்கு அனைவரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *