Cricket
oi-Yogeshwaran Moorthi
எட்ஜ்பாஸ்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருமே ஏமாற்றம் அளித்து வெளியேறி இருக்கின்றனர். தொடக்க வீரர் ரோகித் சர்மா 11 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், விராட் கோலி வெறும் 5 ரன்களில் அவுட்டாகினார்.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 47.5 ஓவர்களில் 258 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. கடைசி வரை களத்தில் இருந்த சீனியர் வீரரான ஜோ ரூட் 76 பந்துகளில் 76 ரன்களை சேர்த்து அசத்தினார்.

இதன்பின் இந்திய அணிக்காக ரோகித் சர்மா – சுப்மன் கில் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. அதில் சுப்மன் கில் வழக்கம் போல் பவுண்டரிகளை அடிக்க, ரோகித் சர்மா கொஞ்சம் தடுமாறி கொண்டே இருந்தார். பிட்சில் இருந்த எக்ஸ்ட்ரா பவுன்ஸ் ரோகித் சர்மாவுக்கு பிரச்சனையாக அமைந்தது. இருப்பினும் சில புல் ஷாட்களை ஆடினார்.
ஆனால் சாம் கரண் வீசிய முதல் ஓவரிலேயே அட்டாக் செய்ய முயன்ற ரோகித் சர்மா, அவரின் ஸ்கோயர் பந்தை கணிக்காமல் பேட்டை விளாசினார். அது நேராக கேப்டன் ஹாரி ப்ரூக் கைகளில் சென்று விழுந்தது. இதன்பின் நட்சத்திர வீரர் விராட் கோலி களம் புகுந்தார். அவரின் வருகையின் போதே ரசிகர்களின் கரகோஷம் அதிகரித்தது.
விராட் கோலி களம் புகுந்த பின் ஆர்ச்சர் அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார். அவரின் வேகத்தில் விராட் கோலி 5 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இரு சீனியர் வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது. தோனி மைதானத்தில் இருக்கும் போது இப்படி இருவரும் ஆட்டமிழந்ததும் ரசிகர்கள் மத்தியில் விவாதமாகி இருக்கிறது.
பயிற்சியாளர் கம்பீரின் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் ஏமாற்றம் அடைந்தார். இவர்கள் இருவரும் ஆட்டமிழந்தாலும் கேப்டன் சுப்மன் கில் மற்றும் துணைக் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இருவருமே பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்து வருகின்றனர். தேவைக்கேற்ப பவுண்டரிகளை விளாசுவதால், இந்திய அணி எளிதாக வெற்றியை நோக்கி வேகமாக பயணித்து வருகிறது.