சொத்து தகராறில் காட்டுமிராண்டித்தனம்; வயதான தாயை காலால் எட்டி உதைத்த மகன் – பரவும் அதிர்ச்சி வீடியோ!

Spread the love

திருப்பத்தூர் அருகேயுள்ள விஷமங்கலம் சித்தேரி பகுதியைச் சேர்ந்த பார்வை குறைபாடுடைய மூதாட்டி விஜயலட்சுமி. இவருக்கு கோபி, ஜோதிராஜ் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், தனது கணவரின் பெயரில் இருந்த நிலத்தை மகன்கள் இருவரின் பெயரிலும் பிரித்துக் கொடுத்திருக்கிறாராம் விஜயலட்சுமி. ஆனாலும், சொத்து பிரித்ததில் அண்ணன், தம்பி இடையே தகராறு இருந்து வந்ததாககிச் சொல்லப்படுகிறது. கடந்த 7-ம் தேதி, மதுபோதையில் இருந்த கோபி, தம்பி ஜோதிராஜின் வீட்டுக்குள் புகுந்து பொருள்களை அடித்து நொறுக்கியதாகக் கூறப்படுகிறது.

தாயை காலால் எட்டி உதைத்த மகன்

தாயை காலால் எட்டி உதைத்த மகன்

தொடர்ந்து, அங்கிருந்த தனது தாய் விஜயலட்சுமியையும் பாய்ந்து சென்று காலால் எட்டி உதைத்திருக்கிறார் கோபி. மகனின் தாக்குதலால் நிலைகுலைந்துபோன மூதாட்டி விஜயலட்சுமி கீழே விழுந்து காயமடைந்து, பிறகு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக, திருப்பத்தூர் தாலுகா காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டும், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனிடையே, தாயை எட்டி உதைத்த மகனின் காட்டுமிராண்டித்தனமான செயல் தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களிலும் வேகமாகப் பரவி, பார்ப்போரை பதைபதைக்க வைத்திருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *