சோட்டானிக்கரை அற்புதங்கள்-2: யட்சினியிடம் இருந்து காத்த அம்பிகை… பிரச்னைகள் தீர்க்கும் பஜனம்! | glory of chottanikkara temple

Spread the love

அம்பாளைப் பற்றிச் சொல்லும்போது, “அதி சௌம்ய அதி ரௌத்ர’ என்பார்கள். அம்பாள் மிகவும் சாந்தமானவளாகவும் இருப்பாள். மிகவும் ரௌத்ரமாகவும் விளங்குவாள். சோட்டானிக்கரை பகவதி தினமும் சரஸ்வதி, லட்சுமி, பார்வதி என்னும் மூன்று திருக்கோலங்களிலும் அருள்பவள் என்பதை ஏற்கெனவே கண்டோம்.

அவளை நாடி வருபவர்களின் துயர் தீர்ப்பவள். இத்தலத்தில் நிகழ்ந்திருக்கும் அற்புதங்கள் அநேகம். அவற்றில் முக்கியமானது குப்தன் நம்பூதிரிக்கு அருளியது.

குப்தன் நம்பூதிரி என்பவர் அம்பிகையின் தீவிர பக்தர். அம்பிகையை உபாசனை செய்து வந்த அவர், கதகளி கலையிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். எங்கு கதகளி நடைபெற்றாலும் அங்கு சென்று பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஒருமுறை இரவு நேரத்தில் கதகளி நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். வழியில் தன்னுடைய குருநாதரின் வீடு இருந்ததால், அங்கே தங்கிவிட்டு மறுநாள் காலையில் புறப்படலாம் என்று நினைத்தார்.

அப்போது வழியில் ஒரு பெண்ணைச் சந்தித்தார். அவள் தானும் கதகளி பார்க்க வந்ததாகவும், இரவு நேரத்தில் தனியாகச் செல்லப் பயமாக இருப்பதால் அவருடன் துணைக்கு வருமாறும் கேட்டுக்கொண்டாள். குப்தன் நம்பூதிரியும் அவளுடைய வேண்டுகோளுக்கு இணங்க அவளுடன் நடக்கத் தொடங்கினார்.

சிறிது தூரம் சென்றதும் குருநாதரின் வீடு வந்தது. அந்தப் பெண்ணைச் சிறிது நேரம் காத்திருக்கச் சொல்லிவிட்டு, குருநாதரிடம் கொடுப்பதற்காகத் தன்னிடம் இருந்த ஓலைச்சுவடிகளைக் கொண்டு வீட்டுக்குச் சென்றார்.

நள்ளிரவில் கதவைத் தட்டிய குப்தன் நம்பூதிரியைப் பார்த்த குருநாதர் ஆச்சரியமடைந்தார். இரவு நேரத்தில் ஏன் வந்திருக்கிறாய் என்று விசாரித்தார். குப்தன் நம்பூதிரி நடந்தவற்றைக் கூறிவிட்டு, வெளியே ஒரு பெண் தனக்காகக் காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இதைக் கேட்ட குருநாதருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. வெளியே வந்து பார்த்த அவர், தன்னுடைய மந்திர சக்தியால் வந்திருப்பது சாதாரணப் பெண் அல்ல; யட்சி என்பதை உணர்ந்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *