சோனம் வாங்சுக்கின் உடல்நிலை மோசமடைகிறது என்று நேற்று முன்தினம் (ஜூலை 18), டெல்லி அரசு மருத்துவமனை சஃப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதை “சட்டவிரோதக் காவல்’ என்று சோனம் வாங்சுக்கும், அவரது மனைவி கீதாஞ்சலியும் குறிப்பிடுகிறார்கள். உடல்நிலையில் பிரச்னை இல்லையென்றாலும், மருத்துவமனையில் சட்டவிரோதமாக வைத்துள்ளனர் என்பதே இவர்களது குற்றச்சாட்டு.
இந்த நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் சோனம் வாங்சுக்கின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது…
“சோனம் வாங்சுக் தொடர்ந்து வி.எம்.எம்.சி மற்றும் சஃப்தர்ஜங் மருத்துவமனையில் மருத்துவப் பராமரிப்பைப் பெற்று வருகிறார். அவரது அத்தியாவசிய உடல் நலம் சார்ந்த அளவீடுகள் சீராக உள்ளன.
இருப்பினும், ரத்தத்தின் அளவீடுகளைத் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டிய அவசியம் உள்ளது. அவர் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பிலும், பல்துறை நிபுணர்கள் அடங்கிய குழுவின் தீவிர மேற்பார்வையிலும் இருந்து வருகிறார்.