எனது கணவர் வேறு ஒரு இடத்தில் நிற்பார். இன்றைக்கு எங்களுக்கு மகாராஷ்டிரா முழுக்க சாலை கட்டுமானப்பணிகள் நடக்கிறது. இதற்காக மும்பை புறநகர் பகுதியில் சிமெண்ட் கலவை, தார் கலவை தயாரிக்கும் தொழிற்சாலைகளை தொடங்கி நடத்தி வருகிறோம். அந்த தொழிற்சாலையை எங்களது மருமகன் பொறுப்பில் விட்டு இருக்கிறோம்”‘ என்றார்
“தினமும் 8 மணி நேரத்திற்கும் மேல் சாலையோரம் நின்று கொண்டு வேலையை கவனிப்பதில் எந்தமாதிரியான சவால்களை சந்திக்கிறீர்கள்” என்று கேட்டதற்கு, “எனக்கு வீட்டு வேலைகள் செய்வதை விட களத்தில் இறங்கி இது போன்று வேலை செய்வதுதான் அதிகமாக பிடிக்கும். அதுதான் எனக்கு மனதிருப்தியை கொடுக்கிறது. ஆரம்பத்தில் சாலையில் நின்று கொண்டு இது போன்ற வேலையை செய்வது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆனால் போகப்போக இந்த வேலையை முழுமையாக கற்றுக்கொண்டேன். அதனால் இந்த வேலையை செய்வதில் எனக்கு எந்த விதமான மனச்சோர்வும் வரவில்லை.
நான் இந்த தொழிலில் எனது கணவருக்கு துணையாக இறங்காமல் இருந்திருந்தால் எனது கணவரால் இந்த அளவுக்கு வளர்ச்சியடைந்து இருக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் அவரை இன்றைக்கு மிகவும் உயர்ந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறேன் என்று நினைக்கும் போது எனக்கு வெயில், மழை பெரிதாக தெரியவில்லை. இப்போது எங்களோடு சேர்ந்து இந்த வேலையை எங்களது மகனும் கவனித்து வருகிறான். ஏ.எம்.சுவாமி கன்ஸ்ட்ரக்ஷன் என்ற நிறுவனத்தில் நானும் இயக்குனராக இருந்து எனது கணவரின் பாதிவேலையை நான் வாங்கி செய்து கொண்டிருக்கிறேன்.
இதனால் எனது கணவரால் இன்றைக்கு எந்த வேலை நடந்தாலும் அந்த வேலையை என்னிடம் விட்டுவிட்டு செல்ல முடியும். சாதாரணமாக லட்சங்களில் புரண்டுகொண்டிருந்த நாங்கள் இன்றைக்கு கோடிகளில் புரண்டு கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு எங்களது கடின உழைப்புதான் காரணம். நவிமும்பை மாநகராட்சி நிர்வாகமும் எங்கள் மீது முழு அளவில் நம்பிக்கை வைத்திருக்கிறது.