சோனி விழா: ரஹ்மான் & சமந்தாவுடன் களமிறங்கும் புதிய தமிழ் சேனல்! Sony Vizha: New Tamil Channel Launch with AR Rahman & Samantha

Spread the love

தமிழ் தொலைக்காட்சி உலகை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில், முன்னணி ஒளிபரப்பு நிறுவனமான சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா (SPNI), தமிழில் “சோனி விழா’ (Sony VIZHA) என்ற புதிய பொழுதுபோக்கு சேனலை மிகப்பிரமாண்டமாக அறிமுகப்படுத்த உள்ளது.

தமிழ்நாட்டு வீடுகளில் தொலைக்காட்சி என்பது வெறும் பொழுதுபோக்கு பெட்டி அல்ல; அது குடும்ப உறுப்பினர்களை ஒன்றிணைக்கும் ஓர் அங்கம். சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என பல ஜாம்பவான்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்தத் துறையில், உலகளாவிய தரத்திலான நிகழ்ச்சிகளுடன் களமிறங்குகிறது ‘சோனி விழா’. இதன் முதல் கட்டமாகவே இந்திய திரையுலகின் இரு பெரும் ஆளுமைகளான இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் முன்னணி நடிகை சமந்தா ஆகியோரை களத்தில் இறக்கி, ஆரம்பத்திலேயே அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளது சோனி நிறுவனம்.

2026 ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று, ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடலுடன் இந்த சேனலின் பெயர் மற்றும் லோகோ அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த சேனல் வருகிற அக்டோபர் 2026-ல் ஒளிபரப்பைத் தொடங்க உள்ளது. தமிழ் மக்களின் கொண்டாட்டங்களையும், கலாசாரத்தையும் பிரதிபலிக்கும் வகையில் ‘விழா’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சோனி நிறுவனத்தின் உலகப்புகழ் பெற்ற இசை நிகழ்ச்சியான ‘இந்தியன் ஐடல்’ (Indian Idol) நிகழ்ச்சியின் தமிழ் பதிப்பாக ‘தமிழ் ஐடல்’ (Tamil Idol) உருவாகிறது. ஏ.ஆர்.ரஹ்மான், தனது இசைப் பயண வரலாற்றில் முதல்முறையாக ஒரு தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவில் நடுவராகக் களமிறங்குகிறார். இதுவே இந்த நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு எகிறச் செய்துள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள புதிய குரல்களைக் கண்டறியும் இந்த நிகழ்ச்சிக்கான ஆன்லைன் ஆடிஷன்கள், ஆகஸ்ட் 18 முதல் சோனி லிவ் (Sony LIV) செயலியில் தொடங்குகின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *