ஐஸ்வர்யா லட்சுமி பேசுகையில், “சமூக வலைத்தளப் பக்கங்களில் நான் பாதுகாப்பாக உணர்ந்ததே இல்லை. பலர் என்னுடைய உடலைப் பற்றித் தேவையில்லாமல் விமர்சித்தார்கள். என் புகைப்படங்களை மார்பிங் செய்து பதிவிட்டார்கள்.
அங்கு வரும் ஒரே ஒரு நெகட்டிவ் கமெண்ட் கூட உலகத்தில் இருக்கிற எல்லாரும் நம்மை வெறுப்பது போன்ற ஒரு உணர்வைக் கொடுத்துவிடும். சோஷியல் மீடியா என்னை ரொம்பவே எச்சரிக்கை உணர்வு கொண்டவளாக மாற்றிவிட்டது.

நேரில் மனிதர்கள் வந்து என்னிடம் பேச முற்படும்போது கூட, அந்த உரையாடலைச் சீக்கிரமாக முடித்துவிட்டு ஓடிவிட வேண்டும் என்றுதான் தோன்றும். உண்மையைச் சொன்னால், எனக்கு 100 கோடி ரூபாய் கொடுத்தால் கூட நான் சோஷியல் மீடியா பக்கம் இனி வரமாட்டேன்.
இருப்பினும் சினிமா செய்திகளைத் தெரிந்துகொள்ளவும், என் படங்கள் எப்படிப் போகின்றன என்று பார்க்கவும் என்னுடைய செல்லப் பிராணியின் இன்ஸ்டாகிராம் கணக்கைத்தான் இன்னமும் பயன்படுத்தி வருகிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.