ஆனால், எந்தப் பிரபலத்தின் குரலில் பேசும்போதும் ஒரு பயம் இருக்கவே செய்யும். ஏனெனில், 100% யாராலும் மற்றொருவரின் குரலை அச்சுப்பிசகாமல் மாற்றிவிட முடியாது. சின்னத் தவறு நடந்தாலும் விமர்சனங்கள் வரும்.
இருந்தாலும், சிலரின் குரல்களை மிகவும் நம்பிக்கையுடன் செய்வேன். அதேபோல், பொன்ராம் சாரின் ‘கொம்பு சீவி’ படத்தில் உடல்நலக்குறைவு காரணமாக மதன்பாபு சாரால் பேச முடியாதபோது நான்தான் டப் செய்தேன்.
ரோபோ சங்கர் அண்ணனுக்கும் ஒரு படத்தில் பேசியிருக்கிறேன்.” என்றவர், “இயக்குநர் அ. வினோத் சாரும் நானும் ஒரே ஜிம்மில்தான் வொர்க் அவுட் செய்கிறோம்.
‘வலிமை’ படத்திற்காக நான் ஒரு கதாபாத்திரத்திற்கு ஆடிஷன் செய்யப்பட்டேன். அப்போதிருந்து அவரை எனக்குத் தெரியும். ஜிம்மில் சந்தித்தபோது, என்னுடைய நடிப்பைப் பாராட்டினார். பிறகு நான்தான் ‘ஜனநாயகன்’ படத்தில் எம்.ஜி.ஆர். குரல் கொடுத்த விஷயத்தைக் கூறினேன்.
ஏனென்றால், நான் உதவி இயக்குநர் ஒருவர் மூலமாகச் சென்றுதான் டப்பிங் பேசினேன். நான்தான் அந்த சீனுக்கு டப்பிங் கொடுத்ததை அவரிடம் சொன்னதும், “அந்த போட்டோ சீனுக்குப் பேசியதா? ரொம்ப தேங்க்ஸ்” என்றார்.
விஜய் சாரைச் சந்திக்க வேண்டும் என ஆசை இருக்கிறது. ஆனால், முதல்வரான பிறகு ரொம்ப பிஸியாக இருக்கிறார். அதற்கான வாய்ப்பு அமைந்தால் நன்றாக இருக்கும். மேலும் சிலர் “ஒரு சின்ன வார்த்தைதானே பேசின, அதுக்கு ஏன் இப்படி பண்ற?” எனச் சொல்கிறார்கள்.
ஆனால், விஜய் சாரின் கடைசிப் படத்தில் எம்.ஜி.ஆர். குரல் வழியாக அவருடன் ஒரு காட்சியில் இடம்பெற்றது எனக்கு வாழ்நாள் சாதனைதான்.” என்றார் உற்சாகத்துடன்.