தீண்டாமை சுவரை அகற்ற.. அமைச்சரின் காலில் விழுந்த இளைஞர்! புத்தக கண்காட்சியில் சலசலப்பு! | Demolition of Untouchability Wall Demanded: Youth Falls at Minister Rajmohan’s Feet at Book Fair

Spread the love

Tamilnadu

oi-Halley Karthik

ஈரோடு: ஈரோட்டில் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் அமைச்சர் ராஜ்மோகன் பங்கேற்றிருந்தார். இப்படி இருக்கையில் அங்கு வந்த இளைஞர் ஒருவர் தீண்டாமை சுவரை அகற்ற கோரி, அமைச்சரின் காலில் விழுந்துந்துள்ள சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தீண்டாமை கொடுமையை ஒழிக்க அரசு எவ்வளவு சட்டங்களை போட்டிருக்கிறது. இருப்பினும் நடைமுறையில் சாதிய பிரச்சனைகளை, மோதல்களை ஒழிக்க பெரும் போராட்டத்தையே நடத்த வேண்டி இருக்கிறது. இப்படி இருக்கையில்தான் அமைச்சர் காலில் விழுந்து சுவரை அகற்ற இளைஞர் கோரிக்கை வைத்திருக்கிறார்.

Minister Rajmohan

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று ஈரோடு புத்தக திருவிழாவுக்கு வந்திருந்தார். அப்போது, அங்கு வந்த இளைஞர் ஒருவர் திடீரென அமைச்சரின் காலில் விழுந்து.. “விருதுநகரில் பட்டியலின குழந்தைகள் கல்வி கற்க தடையாக உள்ள தீண்டாமை சுவரை அகற்ற வேண்டும்” என்று கூறி கோரிக்கை மனுவை அளித்தார்.

இதை சற்றும் எதிர்பாராத அமைச்சர் ராஜ்மோகன், காலில் விழுந்தவரை எழுப்பி.. இந்த விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தீண்டாமை பிரச்சனை சீரியஸாக வெடித்திருக்கிறது. வத்திராயிருப்பு அருகே உள்ள. வ.புதுப்பட்டி கிராமத்தில் தலித் மக்களின் பொது பாதையை அடைத்து, பள்ளி பாதையை மறித்து தீண்டாமை சுவர் கட்டியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் மாணவர்கள் பள்ளிக்கு நீண்ட தூரம் சுற்றி செல்ல வேண்டி இருப்பதாகவம், இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *