இந்தப் பேட்டியில், “அஜித் சார் எப்போதும் அவருடைய இயக்குநர்களிடம், ‘அடுத்து விஜய் சார், ரஜினி சாருக்கு படம் பண்ணுங்கள்’ என்றுதான் சொல்வார். அஜித் சார் எப்போதும் அவருடைய இயக்குநர்களை குடும்பத்தில் ஒருவராகத்தான் பார்ப்பார்.
சமீபத்தில் நான் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியிருந்தேன். அதற்கும் அவர் வாழ்த்து தெரிவித்திருந்தார். அவர் எங்களுக்கு மெண்டாராகவும் இருக்கிறார். அஜித் சார், விஜய் சார் அவ்வளவு உயரத்தில் இருப்பதற்கு இதுதான் காரணம்.
படத்தின் ரிலீஸ் தாமதமாகி, படம் லீக் ஆன பிறகு விஜய் சார் என்னை அழைத்து ‘கவலைப்பட வேண்டாம்; இது மாதிரிதான் நடக்கும்’ என ஆறுதல் தெரிவித்தார். படத்தில் நிறைய அரசியல் சார்ந்த வசனங்கள் இருக்கின்றன.
அந்த வசனங்கள் மிகவும் முக்கியமானவை என்பேன். ‘ஜன நாயகன்’ இப்போது மட்டுமல்லாமல், இன்னும் பல வருடங்களுக்குப் பிறகு இப்படத்தில் இருக்கும் விஷயங்களுக்காகப் பேசப்படும்” என்றார்.