இல்லாத உறவு பொல்லாத உலகம்! – அனுபவப் பகிர்வு

Spread the love

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

எண்பதுகளின் ஒன்றாக படித்த  என் பள்ளித்தோழி. சுமார் நாற்பது வருடங்களுக்குப் பிறகு என் தொடர்பு எல்லைக்குள் வந்திருக்கிறாள். அந்த காலத்தில் கல்லூரி காலத்தில் காலை மாலை இரு வேளையும் பேருந்தில் போகாமல் பேசிக் கொண்டே நடப்போம். நல்ல இலக்கியத் தரம் வாய்ந்த பேச்சு, உரையாடல் விவாதங்கள் தர்க்கங்கள் என உற்சாகமான எண்ணவோட்டத்தில் இருக்கும் இணைந்து பயணித்தவர்கள் நாங்கள்.

நாற்பது ஆண்டுகளுக்கு பின் பேசிக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததில் அவளிடம் எதிர்மறை எண்ணங்கள் ஏராளம் இருக்கிறது எனக்கு மனமடிவாகத் தான் இருக்கிறது. என்ன செய்ய? காலம் அவளுக்கு 

அதிக எதிர்பார்ப்புகளையும் அதை விட அதிகமான துரோகமும் வலியையும் வேதனையையும் கொடுத்தால் பாவம் அவளும் தான் என்ன செய்வாள்.

அவள் எங்கள் வகுப்பு மாணவி கீதா என்று  ஒருவளின் பெயரை சொல்லி, (எனக்கு லேசாக நினைவு) அவள் கதையை அவள் எழுத்தாளர் அக்காவிடம் சொல்லியும் அவர்கள் எழுத முடியாது என்று சொல்லி தப்பித்து விட்டார்கள்.  

என்னை எழுத வேண்டிக் கொண்டாள். எங்கள் உரையாடல்….

உனக்கு அவளை ஞாபகம் இருக்கு தானே.

ஏதோ லேசா…

பரவாயில்லை. அவள் கதையை சொல்றேன். அதை எழுது.

நான் அவ்வளவு பெரிய எழுத்தாளர் இல்லே.

உன்னால் முடிஞ்ச அளவுக்கு எழுது.

அவள் என்னவோ வேதவியாசர் போலவும், அவர் சொல்ல சொல்ல நான் என்னவோ தந்தத்தை முறித்து மகாபாரதம் எழுதிய பிள்ளையாரைப் போலவும் சரி சொல்லு என்றேன்.

என் தோழி தொடர்ந்தாள். அவளோட அம்மாவுக்கு ரெண்டு மகன்கள், ரெண்டு மகள்கள். அம்மா இறந்து போக மூத்த அக்கா புதுவித நோயால் படுத்த படுக்கையாகி போனாள். சொத்தை விற்று வைத்தியம் 

செய்தும் பிரயோஜனம் இல்லை. அவள் உயிரோடு கைவசம் இருந்த சொத்தும் போச்சு.

அச்சச்சோ என்றேன் நான்.

இருடி. அதுக்குள்ளே… என்று சிணுங்கி விட்டு மூத்த அண்ணன் சாலை விபத்தில் இறந்து விட்டான் என்றாள்.பாவம்டி என்றேன்.

அப்புறம் நம்ம கிளாஸ்மேட் கீதாவும் அவள் தம்பியும் எப்படியோ கஷ்டப்பட்டு வளர்ந்து ஆளாகி கல்யாணம் செய்து செட்டில் ஆனார்கள்.

அப்ப்பப்பப்பப்பபாடி…ம்…

என்ன பிரயோஜனம்?

ஏன்? என்னாச்சு?

கீதாவுக்கு குழந்தையில்லை.

போறது போ. அவள் தம்பிக்கு?

ரெண்டு…ரெண்டும் பொண்ணு.

ஏதோ ஒண்ணு. நல்லாயிருந்தா சரி.

தம்பியும் வண்டில போன போது விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்தில் இறந்து போய்ட்டான்.

அடிப்போடி இவளே..

இருடி. கீதா தம்பி பொண்டாட்டியையும் ரெண்டு பெண்களையும் தன்னோடு கொண்டு வந்து வைத்துக் கொண்டாள்.

போகட்டும் போ. ஏதோ ஒன்று..கீதா நல்லவ.

அதனால் தான் அவளும் போய் சேர்ந்துட்டா.

எங்கே?

ம்..எல்லோரும் ஒருநாள் போற இடத்துக்குத் தான்.

அட தெய்வமே.

இப்போ கீதா புருஷனும் தம்பி பொண்டாட்டியம் ஒண்ணா இருக்கா.

வேற வழி?

நீ சொல்றே. ஆனா ஊரும் உலகமும் அவர்களை தப்பா சொல்லுது.

எதுக்கு? புரியாமல் தான் கேட்டேன்.

ம்ம்ம்

முறைக்காதே. ரெண்டுபேரும் அண்ணன் தங்கை தானே.

உண்மை தான். ஆனால் பாழாய் போன உலகம் அப்படி நினைக்கலையே

ஓஹோ

இந்த வயசுல இது தேவையான்னு என் மூஞ்சிக்கு நேரா கேட்கிரங்க உறவுக்காரங்க என்று அழறா பாவம்.

நீ என்ன சொன்னே? என்று கேட்டேன்.

நீ தப்பு பண்ணலை. அப்படியே பண்ணினாலும் உங்களை கேள்வி கேட்க கூடிய ரெண்டு பேரும் இல்லை. நீ கஷ்டப்பட்ட போது அச்சச்சோ ன்னு ஒரு வார்த்தை சொல்லாத இந்த உலகம் இப்போ ஐயையோ ன்னு சொல்றதை பொருட்படுத்தாதேன்னு சொன்னேன். என்றாள் என் தோழி.

எனக்கும் அவள் சொன்னது சரி என்று பட்டது.

உங்களுக்கு?

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *