சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் இன்று ரிப்பன் பில்டிங்கில் நடந்திருந்தது. இந்தக் கூட்டத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டிருந்தது.

அவையில் நேரமில்லா நேரத்தில் கடைசி ஒரு சிலருக்கு முன்பாக காங்கிரஸ் கவுன்சிலர் சாமுவேல் திரவியத்துக்கு பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது எழுந்த சாமுவேல், “பெருந்தலைவர் காமராஜர் வாழ்க… ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு எனச் சொல்லி அதை நிறைவேற்றி எங்களையும் அமைச்சரவையில் இடம்பெற செய்த ஜனநாயகன்… தளபதி … முதல்வர் விஜய்க்கு நன்றி’ எனப் பேச்சை தொடங்க முற்பட்டார்.