ஜப்பானிய நண்பரின் அதிர்ச்சிப் பேச்சு! – இந்தியர்களை உலகம் எப்படிக் பார்க்கிறது?

Spread the love

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

“நான் கேட்கிறேனே என்று தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள் அகிரா! கடந்த ஆறு ஆண்டுகளாக என் உடன் பிறந்த சகோதரனுக்கும் மேலாக என்னைப் பாசமுடன் கவனித்துக் கொண்டீர்கள்..

பணம் தேவைப்படுகையில் பணம் தந்தீர்கள்.. மருத்துவ உதவி தேவைப்பட்டபோது உடன் மருத்துவ மனைக்கு வந்தீர்கள்.. எங்காவது புது இடங்களுக்குப் பணி நிமித்தம் செல்ல வேண்டியிருந்தால், உங்கள் காரிலேயே அழைத்துச் சென்றீர்கள்..

நான் புது நாடான ஜப்பானில் இருக்கிறேன் என்பதையே என்னை மறக்கச் செய்து விட்டீர்கள்.. ஏதோ எங்கள் ஊரில் என் சகோதரனுடன் பாதுகாப்பாக சுற்றி வரும் மனோநிலையிலேயே என்னை வைத்திருந்தீர்கள்.. அவற்றாலெல்லாம் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி..

என் இறைவனுக்குத் தினந்தினம் இரவும், உங்களை எனக்கு அறிமுகப்படுத்தியதற்காக நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறேன்! ஆனாலும் ஒன்று மட்டும் எனக்குப் புரியவில்லை. அதனைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவலும் சமீப காலத்தில் மனதில் தோன்றி, இப்பொழுது அதுவே மனதை அரிக்க ஆரம்பித்து விட்டது!” என்று முத்து சொல்ல, அதனைக் கேட்ட அகிரா,

“அப்படியா? தாராளமாக என்னிடம் கேளுங்கள் முத்து! உங்களை நான் என் சகோதரனாகத்தான் பார்க்கிறேன்! உங்களிடம் நான் எதையும் மறைப்பதில்லை. பிறப்பிடந்தான் வேறேயொழிய நாம் மனிதர்கள்தானே! அதிலும் மனமொத்த மனிதர்கள்! தயங்காமல் என்னவென்று கேளுங்கள்!” என்ற அகிரா, தான் முத்துவிடம் கற்ற தமிழிலேயே பதில் சொல்ல, இருவரும் அந்தப் பூங்கா பெஞ்சிலிருந்து எழும்பி மெல்ல நடக்க ஆரம்பித்தார்கள்.

“அது ஒன்றுமில்லை அகிரா! இவ்வளவு நாட்கள் நாம் பழகியும் ஒரு டீக்கோ, டிபனுக்கோ கூட என்னை உங்கள் வீட்டிற்கு அழை theததில்லையே! அதன் காரணத்தைத் தெரிந்து கொள்ளத்தான் மனது துடிக்கிறது. எங்களூரில் பழக ஆரம்பித்ததுமே வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுப்பது வழக்கம். அதனால்தான் கேட்கிறேன்!” என்று அகிராவைப் பார்த்தபடியே முத்து சொல்ல, சற்றே அதிர்ந்தாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், “இதுதானா முத்து! நான் வேறு ஏதும் தவறு செய்து விட்டேனோவென்று பயந்து விட்டேன்! அதுக்குப் பெரிசா ஒண்ணும் காரணம் இல்ல! அதை விடுங்க!” என்க,

“இல்லை அகிரா! நீங்க அதுக்கான காரணத்தைத் தயவு செய்து சொல்லணும்” என்ற முத்துவின் அன்பான கண்டிப்பைப் புரிந்து கொண்ட அகிரா, சொல்ல ஆரம்பித்தார்.

“தப்பா நெனைக்காதீங்க முத்து! வரலாற்றுச் சான்றுகளை அடிப்படையா வெச்சு, இந்தியர்களை முழுசா எங்க நாட்டினர் நம்பறது இல்ல. சரித்திரத்தில அது தொடர்ந்தும் வந்துக்கிட்டு இருக்கறதனால, அதை இப்பவும் மாற்ற முடியல! மேலும் நான் அதை மாற்ற முயன்றாலும் வீட்ல இருக்கற தாத்தா, பாட்டி, மாற்றி யோசிப்பது கஷ்டம் இல்லையா?

அதனாலதான் இந்தியர்களோட நட்பை நாங்க வீட்டுக்குக் கொண்டு போறது இல்ல”. கடைசி வாக்கியத்தைச் சொல்கையில் அகிராவின் வார்த்தைகளில் ஒருவித தயக்கம் இழையோடியது. அதை முத்துவும் கவனிக்கத் தவறவில்லை.

“என்ன சொல்றீங்க அகிரா? எனக்கு ஒண்ணும் சரியாப் புரியல! கொஞ்சம் விளக்கமா சொல்றீங்களா?” என்ற முத்துவின் வார்த்தைகளில் லேசான கெஞ்சல் தலை தூக்கியது!

“அதான் சொல்ல வெச்சிட்டீங்களே! இனி முழுசாச் சொல்லித்தானே ஆகணும்! சொல்றேன்! ஆங்கிலேயர்கள் உங்களை ஆள ஆயிரக்கணக்கிலயா வந்தாங்க? என்ன? ஓர் இருநூறு அல்லது முந்நூறு பேருதானே முதல்ல வந்திருப்பாங்க! அவங்களுக்கு ஒதவுனது யாரு? ஒங்க மக்கள்தானே! எதுக்காக ஒதவி செஞ்சாங்க? பணத்துக்கும், பதவிக்கும் ஆசைப்பட்டுத்தானே! சொந்த நாட்டிலேயே அந்நியன் காலூன காரணமா இருந்தது ஒங்க ஆளுங்கதானே?”

முத்து ஒருவித வெட்கத்தில் தலை குனிய, அகிரா மேலும் தொடர்ந்தார்.

“வீர பாண்டிய கட்ட பொம்மன் வீராவேசமா ஆங்கிலேயரை எதிர்த்தாரே! அவரைக் காட்டிக் கொடுத்தது ஒங்க எட்டப்பர்தானே! 1919 ஏப்ரல் 13 ஐ நீங்க ஞாபகம் வெச்சிருக்கீங்களோ இல்லையோ, நாங்க ஞாபகம் வெச்சிருக்கிறோம். ஜாலியன் வாலாபாக்கில் பிரிட்டிஷ் ராணுவ பிரிகேடியர் ஜெனரல் ரெஜினால்ட் டையர் உத்தரவின் பேரில் சுட்டதெல்லாம் யார்? ஒங்க ஆளுங்களுந்தானே!

அதில அநியாயமா செத்தவங்க எவ்வளவு பேர் தெரியுமா? பிரிட்டிஷ் அரசின் கணிப்பு, இறந்தவர்கள் 379 பேர் என்றும் காயமடைந்தவர்கள் 1200 பேர் என்றும் ஒரு கணக்கு கொடுத்தது. பின்னர் வந்த ஹண்டர் குழு அறிக்கையும் 370 என்றே உறுதி செய்தது. பிற ஆய்வு அறிக்கைகளோ இறந்தவர்களே 1500 க்கு மேல் என்றது.”

“அதோடு மட்டுமல்ல! மொஹலாயர்கள் உள்ளே வந்தபோது உதவியர்களெல்லாம் உங்கள் மக்களும் சிற்றரசர்களுந்தானே! இப்படித்தானே எல்லா நிகழ்வுகளிலும், நாட்டையோ, நாட்டு நலனைப் பற்றியோ கவலைப்படாமல் சுய நலம் ஒன்றையே கருத்தில் கொள்பவர்களாகவே உங்கள் மக்கள் தொடர்ந்து நடந்து வருகிறார்கள். என்ன? முன்பு வீர பாண்டியர்கள் அதிகம் பிறந்தார்கள். பிறகோ… எட்டப்பர்களின் எண்ணிக்கையே கூடி வருகிறது. இந்தியர்கள் தங்கள் சுய நலனுக்காக எதையும் செய்வார்கள் என்ற சாயத்தை,இந்தியர்கள் மீது சரித்திரம் பூசி விட்டது!”

“சமீபத்தில் கூடப் பாருங்கள். ஜெயித்த எம்.எல்.ஏக்கள் பதவிக்காகவும், பணத்திற்காகவும் பதவியை ராஜினாமா செய்கிறார்கள். கட்சி மாறி, மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். மக்கள் அவர்களையும் ஜெயிக்க வைக்கிறார்கள். இந்த நிலவரமே எங்களைப் பயப்பட வைக்கிறது! நீங்கள் வேண்டுமானால் விதி விலக்காக இருக்கலாம். விதி விலக்குளால் விதியை மாற்றி அமைக்க முடியாதல்லவா நண்பரே! சாரி நண்பரே! உங்கள் மனதைப் புண்படுத்தியிருந்தால் என்னை மன்னிக்கவும்! நீங்கள் வற்புறுத்திக் கேட்டதாலேயே இந்தக்காரணத்தைச் சொல்ல வேண்டியதாயிற்று! நீங்கள் கோபப்படக் கூடாது!” சொல்லி விட்டு, முத்துவின் இரு கைகளையும் ஆதரவாகப் பிடித்துக் கொள்கிறார் அகிரா!

“நீங்கள் சொன்னவை அனைத்தும் உண்மைதான் அகிரா! நீங்கள் எதற்கு மன்னிப்பு கேட்கிறீர்கள். உண்மையைத்தானே சொன்னீர்கள்! திருந்த வேண்டுவது நாங்கள்தானே! எங்கள் இளைய தலைமுறைதான் இதைப்பற்றி ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். நிச்சயம் மாற்றம் வர வேண்டும். வருமென்று நம்பித்தான் எங்களைப் போன்றோர் ஓடிக் கொண்டிருக்கிறோம். பார்க்கலாம் என்ன நடக்கிறதென்று!” நம்பிக்கையாக முத்து பேசினாலும், அகிரா சொன்ன உண்மை அடி வயிற்றைக் கலங்கடிக்கவே செய்தது!

-ரெ.ஆத்மநாதன், புளோரிடா.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..!

இந்த வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப்பில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *