ஜம்மு காஷ்மீரில் கவிழும் ஆட்சி? உமர் அப்துல்லாவிற்கு எதிராக 24 எம்எல்ஏக்கள் போர்க்கொடி.. பரபரப்பு | 24 MLA’s revolt agains Jammu Kashmir CM Omar Abdullah

Spread the love

India

oi-Nantha Kumar R

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் ஆதரவில் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா முதல்வராக இருக்கிறார். சமீபத்தில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில் அவரது கட்சியை சேர்ந்த 24 எம்எல்ஏக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். முதல்வர் உமர் அப்துல்லாவிற்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளதால் ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சியின் ஆட்சி கவிழ்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

24-mlas-revolt-agains-jammu-kashmir-cm-omar-abdullah

ஜம்மு காஷ்மீரில் கடந்த 2024ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. மொத்தம் 90 தொகுதிகள் உள்ளன. அங்கு ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 46 இடங்களில் வெற்றி பெற வேண்டும். ஆனால் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை.

உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி 42 தொகுதிகளிலும், பாஜக 29 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 6 இடங்களிலும் வெற்றி பெற்றது. மெகபூபா முப்தியின் ஜேகேபிடிபி கட்சி 3, ஜேபிசி 1, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்று வெற்றி பெற்றது. மீதமுள்ள இடங்களில் சுயேச்சைகள் வெற்றி பெற்றனர்.

இதையடுத்து உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சிக்கு, காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கெடுக்காமல் வெளியில்இருந்து ஆதரவு வழங்கியது. இதனால் உமர் அப்துல்லா தனது 42 எம்எல்ஏக்கள், காங்கிரஸ் கட்சியின் 6 எம்எல்ஏக்களின் ஆதரவில் மெஜாரிட்டியான 46 இடத்தை தாண்டி 48 எம்எல்ஏக்களின் ஆதரவை பெற்றார். அதன்பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு எம்எல்ஏ, சுயேச்சை மற்றும் சிறிய கட்சிகளை சேர்ந்த சில எம்எல்ஏக்களும் உமர் அப்துல்லாவிற்கு ஆதரவு அளித்தனர். இதனால் அவருக்கு சட்டசபையில் 50க்கும் அதிகமான எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தது.

இதனால் எந்த பிரச்சனையும் இன்றி உமர் அப்துல்லா கடந்த 2 ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வந்தார். இந்நிலையில் தான் கடந்த 27 ம் தேதி உமர் அப்துல்லா தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்தார். ஜம்மு காஷ்மீரில் முதல்வர் உள்பட மொத்தம் 9 பேர் மட்டுமே அமைச்சரவையில் இடம்பெற முடியும். காலியாக இருந்த 4 இடங்களுக்கு புதியவர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

இந்த அமைச்சரவை விரிவாக்கத்தை தொடர்ந்து தான் முதல்வர் உமர் அப்துல்லா மீது 24 எம்எல்ஏக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். அவர்கள் முதல்வர் உமர் அப்துல்லாவிற்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *