“ஜீ தமிழ்’ தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் ‘சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 5’ நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இறுதிப்போட்டிக்கு தற்போது ஆறு பேர் பைனலிஸ்டாகத் தேர்வாகியுள்ளனர். அந்த லிட்டில் சாம்ப்ஸ் அனைவரிடமும் ஜாலியாக ஒரு உரையாடலை நிகழ்த்தினோம்.

முதல் பைனலிஸ்டான விஷ்ணுவரதன், “எல்லாரும் நல்லா பாடுற ஒரு மேடையில நான் தேர்வாயிருக்கிறது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அப்பா, அம்மா கூட இதை எதிர்பார்க்கல. என் அம்மாகிட்ட நான் நல்லா பாடுறேன் பாட்டு கிளாஸ் சேர்த்துவிடலாம்னு சொன்னாங்க.
ஆனா, அம்மாகிட்ட சேர்த்துவிட காசு இல்லைன்றதால இன்னொருத்தவங்கதான் என்னைப் படிக்க வச்சாங்க. அகாடமில நான் நல்லா பாடுறேன்னு, என்னை ஆடிஷன்ல கலந்துக்க சொன்னாங்க. எஸ்.பி.பி சார் மாதிரியே இருக்கிறதால எனக்கு சரண் சாரை ரொம்ப பிடிக்கும்” என்றார்.
இரண்டாம் ஃபைனலிஸ்டான அக்ஷித் நிருபம், “சீசன் 4 ஆடிஷன்ல முதல் சுற்றிலேயே எலிமினேட் ஆயிட்டேன். சீசன் 5 இல் இறுதிச் சுற்று வரை வந்திருக்கிறது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்றார்.
மூன்றாம் ஃபைனலிஸ்டான வர்ஜா, “பொதுவாவே கோல்டு வாங்கினவங்கள்ல இருந்துதான் ஃபைனலிஸ்ட் தேர்வு செய்வாங்க. நான் கோல்டு வாங்கினப்போ ஐந்து பேர் கோல்டு வாங்கி இருந்தாங்க.
அதுல இருந்து மூன்று பேர்தான் தேர்வு செய்வாங்கன்றதால எனக்கு ரொம்ப பயமா இருந்தது. என் பெயரைச் சொன்னதும் எனக்கு நான்தான் அதுன்னு நம்ப முடியாத அளவுக்குச் சந்தோஷமா இருந்தது.