ஜெம் வீரமணி விவகாரம்… முதன்முறையாக வாய்திறந்த விஜய்.. என்ன சொன்னாருனு கவனிச்சீங்களா? – Kumudam

Spread the love

ஜெம் கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளர் வீரமணி சிறுமிகள் தொடர்பான பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை தற்போது தீவிரமடைந்துள்ளது. இதனிடையே, வழக்கில் புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், மேலும் சிலரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக ஆளும் தவெக மற்றும் திமுக இடையே ஏற்கெனவே அரசியல் மோதல் உருவாகியுள்ளது. வீரமணி வழக்கு முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் முறையாக விசாரிக்கப்படவில்லை என தவெக தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதனை திமுக தரப்பு மறுத்துள்ளது.

இந்த நிலையில், மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் பேசிய விஜய், இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் ஆட்சியை கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளார்.

“ஒருத்தன் இத்தனை வருஷமா சீரழிச்சிட்டு இருந்துருக்கான். திமுக அரசுல அது மூடி மறைக்கப்பட்டது. என்ன டீலிங் நடக்கிறது உள்ளுக்குள்ள? ஸ்டாலின் சார் வாய் திறங்க” என விஜய் பேசினார்.

வீரமணி விவகாரத்தில் இதுவரை அரசியல் ரீதியாக பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்திருந்த நிலையில், விஜய் நேரடியாகப் பேசியிருப்பது தற்போது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

இதற்கிடையே, வீரமணி வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கை விசாரிக்க நான்கு ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வீரமணி வழக்கில் முதல்முறையாக விஜய் வெளிப்படையாகக் கருத்து தெரிவித்திருப்பது, ஏற்கெனவே சூடுபிடித்துள்ள திமுக–தவெக அரசியல் மோதலுக்கு மேலும் முக்கியத்துவம் அளித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *