‘ஜெம் வீரமணி வீடியோக்களோடு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே புகாரளித்தேன்!’ – ஆதாரத்தோடு காங்கிரஸ் ரஞ்சன் குமார் |”I Filed a Complaint Two Years Ago With JEM Veeramani’s Videos!” Congress’ Ranjan Kumar With Evidence

Spread the love

காவல்துறையின் விசாரணையில் திருப்தியடையாத நீதிபதி பத்மா இந்த வழக்கை மறுவிசாரணைக்கு உத்தரவிட்டார். இந்நிலையில், ஜெம் வீரமணியால் பாதிக்கப்பட்டோரைக் கண்டுபிடித்து அவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஜெம் வீரமணியை காவல்துறை கைது செய்திருக்கிறது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் பட்டியலினப் பிரிவு தலைவரான ரஞ்சன் குமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வீடியோ ஆதாரங்களுடன் ஜெம் வீரமணி குறித்து புகாரளித்ததாக பகீர் கிளப்பியிருக்கிறார்.

இதுதொடர்பாக காவல்துறை உயரதிகாரி கண்ணனுக்கும் இன்ஸ்பெக்டர் மகேஷுக்கும் அவர் அனுப்பிய குறுஞ்செய்திகளையும் புகார் மனுவையும் வெளியிட்டிருக்கிறார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே புகாரளித்தும் ஜெம் வீரமணி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என ரஞ்சன் குமார் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *