இது சம்பந்தப்பட்ட பள்ளி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கல்வித்துறை அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார். மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் புகார் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் பள்ளியின் இந்த நடவடிக்கையை நரேந்திர மேத்தா ஆதரித்துள்ளார். இது சத்தான உணவைச் சாப்பிட மாணவர்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “‘ஜெயின் மதம் ஒரு விஞ்ஞான மதம். வெங்காயம், பூண்டு மற்றும் உருளைக்கிழங்கு ஆரோக்கியமான உணவு அல்ல. குழந்தைகள் சத்தான உணவைச் சாப்பிடுவதை உறுதிசெய்து, இந்தப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். விநாயகர் சதுர்த்தி மற்றும் நவராத்திரி போன்ற பண்டிகைகளின் போது அல்லது மத சடங்குகளின் போது குடும்பங்கள் பொதுவாக அசைவ உணவை வீட்டில் தவிர்ப்பார்கள்.
பரியூஷன் காலத்தில் இதுபோன்ற கிழங்குகள் பள்ளியில் தடைசெய்யப்பட்டால், அதில் என்ன தவறு?” என்று கேட்டுள்ளார்.
அதேசமயம் இது நியாயமில்லை என்றும், இது பெற்றோரின் விருப்பம் என்றும், ஒவ்வொருவரும் தங்கள் சொந்த மதம் மற்றும் நம்பிக்கைகளைப் பின்பற்றுகிறார்கள், அதை குழந்தைகள் மீது திணிக்கக்கூடாது என்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகி அருந்ததி சவான் கூறினார்.