ஜெயில் நல்ல சவுகரியமாக இருக்கு.. விஜய்க்கு மிரட்டல் விடுத்து கைதான திமுக எம்எல்ஏ மார்கண்டேயன் பேச்சு | “The jail is quite comfortable”, says DMK MLA Markandeyan who was arrested for threatening CM Vijay

Spread the love

Tamilnadu

oi-Nantha Kumar R

தூத்துக்குடி: ”நீங்க நினைக்கிற மாதிரியெல்லாம் இல்லை. ஜெயில் நல்ல சவுகரியமாக இருக்கு” என்று விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏ மார்கண்டேயன் தனது ஆதரவாளர்களிடம் கூறிய வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டசபை தொகுதியின் திமுக எம்எல்ஏவாக இருப்பவர் மார்கண்டேயன். இவர் தமிழக முதல்வர் விஜய்யை மிரட்டும் தொனியில் சமீபத்தில் பேசினார்.

the-jail-is-quite-comfortable-says-dmk-mla-markandeyan-who-was-arrested-for-threatening-cm-vijay

இதுபற்றிய புகாரை தொடர்ந்து போலீசார் மார்கண்டேயன் எம்எல்ஏவை கைது செய்தனர். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மார்கண்டேயன் எம்எல்ஏ திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் தான் ஜாமீன் கோரி மாக்கண்டேயன் எம்எல்ஏ தரப்பில் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மார்க்கண்டேயனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதேபோல் மார்க்கண்டேயனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீசார் தாக்கல் செய்த மனுவையும் நீதிபதி சுமதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கிற்காக தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் மார்கண்டேயனை போலீசார் அழைத்து வந்திருந்தனர். இருமனுக்களை தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து மார்கண்டேயன் எம்எல்ஏவை போலீசார் மீண்டும் காவல் வாகனத்தில் ஏற்றி சிறைக்கு அழைத்து சென்றனர். இந்த வேளையில் காவல் வாகனத்தில் இருந்தபடி மார்கண்டேயன் தனது ஆதரவாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், ”நீங்க நினைக்கிற மாதிரிலாம் இல்ல ஜெயில் நல்ல சவுரியமாக இருக்கு. உள்ளே 25 புத்தகம் வைத்திருக்கிறேன். எல்லாம் நல்லா இருக்கிறது.நீங்கள் ஹேப்பியா இருங்க. எத்தனை நாள் உள்ளே இருக்கிறோமோ அவ்வளவு விரைவாக ஆட்சிக்கு வருகிறோம். எல்லோரும் ஹேப்பியா இருங்க” என்று கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *