“சாமந்தி சீரியல்ல ரோபோட், மேஜிக்னு புதுசா இருக்கும்!” – நடிகர் சுர்ஜித் பேட்டி! | “Samandhi Serial Has Unique Fantasy & Robot Elements!” – Actor Surjith Interview

Spread the love

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் “சந்தியாராகம்’ தொடர் மூலம் மக்களின் அன்பைப் பெற்றவர் நடிகர் சுர்ஜித்.

அந்த சீரியலிலிருந்து விலகியவர் இப்போது ‘சாமந்தி’ தொடரின் மூலம் மீண்டும் ‘ஜீ தமிழ்’ சேனலுக்கு வந்திருக்கிறார். இந்த சீரியலுக்காக அவரைச் சந்தித்துப் பேட்டி கண்டோம்.

Surjith - Samanthi Serial

Surjith – Samanthi Serial

நம்மிடையே பேசியவர், “‘சாமந்தி’ சீரியலோட ஷூட்டிங் இப்போதான் ஆரம்பிச்சிருக்கோம். ரொம்ப கலகலப்பான, ஜாலியான ஒரு டீம் அமைந்திருக்கிறது. இந்த சீரியலின் கதை ஒரு கியூட்டான லவ் ஸ்டோரி. கூடவே நிறைய ஃபேண்டசி எலிமென்ட்ஸ் இருக்கும்.

வழக்கமான சீரியல்களில் மாமியார்-மருமகள் சண்டைதான் பிரதானமாக இருக்கும், ஆனா இதுல அது ஒரு பகுதியா இருந்தாலும், அம்மாவுக்கும் பையனுக்கும் இடையேயான பாசப் போராட்டம் ரொம்ப முக்கியமானது. நான் இதில் ‘அர்ஜுன்’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.

இந்த சீரியலில் வர்ற ‘ஃபேண்டசி’ என்பது மேஜிக் மற்றும் ரோபோட் சம்பந்தப்பட்டது. தமிழ் சீரியலில் தொடக்கம் முதல் முடிவு வரை ஒரு ரோபோட் முழுமையாக வருவது இதுவே முதன்முறை என நினைக்கிறேன். இது குழந்தைகளுக்கு ரொம்பவே பிடிக்கும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *