ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’: வாழ்த்து தெரிவித்த சூர்யா – ஜோதிகா! | Jason Sanjay’s Sigma Release: Suriya & Jyothika Share Heartfelt Wishes

Spread the love

ஜேசன் சஞ்சய்யை வாழ்த்திய ஜோதிகா, “அன்புள்ள ஜேசன் சஞ்சய் மற்றும் படக்குழுவினருக்கு, ‘சிக்மா’ திரைப்படத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் பட விளம்பரங்களை மிகுந்த மகிழ்ச்சியோடு பார்த்து வருகிறேன்.

நீங்கள் இவ்வளவு முதிர்ச்சியாக, அமைதியாக, இயல்பாக இருக்கிறீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் பெற்றோருக்கு ஒரு சிறந்த மகனாக வளர்ந்திருப்பதைப் பார்க்கும் போது, ஒவ்வொரு வெற்றியையும் நீங்கள் பெற முற்றிலும் தகுதியானவர் என்று தோன்றுகிறது.

உங்களுக்கும் முழு படக்குழுவிற்கும் திரைப்படம் சிறப்பான முறையில் வெளியாக வாழ்த்துகள். இறைவன் உங்களை எப்போதும் ஆசீர்வதிக்கட்டும்” எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.

சூர்யா, “உங்கள் வரவு நல்வரவாகட்டும் சஞ்சய்! சின்ன பையன் சஞ்சய் இப்போது இயக்குநராகிவிட்டார் என்பதை நம்ப முடியவில்லை.

நாளைக்கு பெரிய நாள். மனமார்ந்த வாழ்த்துகள்!” எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *