ராதிகா சரத்குமார், லியோ சிவகுமார், பிரிகிடா சகா ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் “டெலிவரி பாய்’ திரைப்படம் நவம்பர் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
லியோ சிவகுமார் திண்டுக்கல் லியோனியின் மகன் என்கிற தகவல் பலரும் அறிந்ததே.
இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நெப்போட்டிசம் தொடர்பாக லியோ சிவகுமார் பேசியிருக்கிறார்.
அவர் பேசுகையில், “நான் திரைத்துறைக்குள் வருவதற்கு முன்பு வரைக்கும் வெறும் சிவகுமாராகத்தான் இருந்தேன். ஆனால், சினிமாவில் கால் வைத்த பிறகு ‘லியோனி பையனாக’ மாறிவிட்டேன். அது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை.
நெப்போ கிட், நெப்போட்டிசம் என்றெல்லாம் சொல்கிறார்கள். ‘மீசைய முறுக்கு 2’ படம் பார்க்கும்போதுதான் எனக்கு நெப்போட்டிசம் என்பதன் அர்த்தமே புரிந்தது. நான் எங்க அப்பாவுக்குப் பிறந்தவன். என் பெயர் லியோ சிவகுமார். சினிமாவில் ஆரம்பத்தில் எத்தனையோ படிகள் ஏறி இறங்கியிருக்கிறேன்.