இவ்வளவு சின்ன வயதிலேயே தொடரின் மதிப்புமிக்க வீரர், சூப்பர்! ஸ்ட்ரைக்கர், சூப்பர் சிக்ஸர் என பல பரிசுகளையும் பாராட்டுகளையும் வென்றிருக்கும் சூர்யவன்ஷி, வெகு விரைவில் சர்வதேசப் போட்டியில் இந்திய அணிக்காகக் களமிறங்க இருக்கிறார். அசாத்தியமான இவரது விளையாட்டுத் திறன் குறித்து விளக்குகிறார் கிரிக்கெட் விமர்சகரும் எழுத்தாளருமான தினேஷ் அகிரா.
பிறப்பியல்பாகவே வைபவ் சூர்யவன்ஷி அசாத்தியத் திறமை கொண்டவராக இருக்கிறார். தொடரில் 700 ரன்களுக்கு மேல் 15 வயதுச் சிறுவன் ஐ.பி.எல். குளிப்பதெல்லாம் சாதாரணம் இல்லை. இவருக்கு ‘பேட் ஸ்லிங் (மட்டைச் சுழற்சி) அநாயாசமாகக் கை வருகிறது. பேட் ஸ்விங்’ எவ்வளவு நன்றாகக் கை வருகிறதோ அவ்வளவுக்கு பெரிய ஷாட்கள் விளையாட முடியும். சூர்யவன்ஷியின் இந்த அசாத்தியமான மட்டைச் சுழற்சியை மேற்கிந்தியத் தீவுகள் அணியைச் சேர்ந்த லெஜெண்ட் பேட்ஸ்மேன் கேரி சோபர்ஸின் திறமைக்கு ஈடாக ஒப்பிடுகிறார்கள்.
சூர்யவன்ஷியின் ஆட்டத்தைப் பார்க்கும் போதே தெரியும். அவருக்குக் களத்தில் கொஞ்சம்கூட பயமோ, பதற்றமோ இல்லை என்று? சிறந்த பேட்ஸ்மேன்கள் கூட பெரிய வாய்ப்புகள் கிடைத்துப் போகும்போது, திறம்பட இன்றைய ராயல் சேலஞ்சர்ஸ் விளையாடாமல் சொதப்புவதன் காரணம் பயம்தான்; பதற்றம்தான்! பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் பட்டிதாருக்கு 2024-ம் ஆண்டு ஆஸ்திரேலிய சீரிஸில் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்பட்டன. இருந்தும். அவரா சோபிக்க முடியாமல் போனது .தைரியமாக எதிர்கொள்ள காரணம், பெரிய வாய்ப்பைச் முடியாத பதற்றம்தான் உலகித் தலைசிறந்த பாலதேளான பும்ரம் ஆர்ச்சர் போன்றோரின் முதல் பந்தையே சிக்ஸருக்குத் தட்டில் : தூக்கவேண்டுமென்றால், திறமை : சூர்யவன்ஷியிடம் அது ஏசுமாக இருந்தால் மட்டும் போதாது. அதிக தன்னம்பிக்கையும் வேண்டும்.
அவரை நேர்காணல்களில் பார்க்கும்போது, குழந்தைத்தனம் நிரம்பியிருந்தாலும் தன்னைப் பற்றிய பெருமிதமும் அவர் முகத்தில் மின்னுகிறது. இளங்கன்று பயமறியாது என்பது போல், எதிரே எவ்வளவு பெரிய திறமைசாலியான பவுலர் இருந்தாலும் அவரின் பந்தை துணிச்சலாக எதிர்கொள்ள ‘முடிகிறது சூர்யவன்ஷியான்!” என்கிறார். தினேஷ் அகிரா.
கிரிக்கெட் ஆட்டத் திறமை ரத்தத்திலேயே கலந்திருக்கும் வைபவ் சூர்யவன்ஷியைப் போன்ற ஒரு வீரரை இந்திய அணி சரியாக பயன்படுத்தி ஊக்குவிக்க வேண்டும் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டத் திறன் என்பது சச்சின் டெண்டுல்கரைப் போல இயல் பாகவே அவருக்கு வாய்த்திருக்கிறது.
அடித்தார் சச்சின் சூர்யவன்ஷியும் அப்படிப்பட்ட திறன் கொண்டவர்தான். அவரை அவரது இயல்பிலேயே இருக்க விட வேண்டும் 2003-ம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டிகளில் ஒரு போட்டிக்குக்கூட வலைப்பயிற்சியில் ஈடுபடவில்லை. சச்சின். காரணம், அது அவருக்குத் தேவைப்படவில்லை. இருந்தும், அந்தத் தொடரில் 673 ரன்கள் அதிகப்படியான பயிற்சிகள் கொடுத்து அந்த இயல்புத்தன்மையைக் கெடுத்துவிடக் கூடாது” என்கிறார், தினேஷ் அகிரா.
“இந்தியாவில் ப்ரித்வி ஷா, வினோத் காம்ப்ளி போன்ற மிகச் சிறந்த திறமையாளர்கள் உருவாகி வந்தார்கள். வினோத் காம்ப்ளி சச்சின் டெண்டுல்கரை விடவும் திறமையானவராக இருந்தார். ஆனாலும், ஒரு கட்டத்தில் அவர்களின் மனம் விளையாட்டிலிருந்து விலகிப்போய் புகழின் உச்சத்துக்குப் போகவிட்டது. ஆகவே, அவர்களால் மாபெரும் சாதனைகள் நிகழ்த்த முடியாமல் போனது. வைபவ் சூர்யவன்ஷி முழுமையான திறமைசாலி.
அவர் இந்தத் தலைமுறையின் அற்புதம் எனலாம் அவரின் மனம் கடைசி வரை விளையாட்டிலிருந்து ஒரு துளியும் விலகக் கூடாது. பின்பும்கூட விளையாட்டிலிருந்து மனத்தை விலக்காமல் இருந்தார் சச்சின். இந்த விளையாட்டுக்குத் தேவையான ஒழுக்கமும் கவனமும் அவரிடம் இருந்தன. அவரை ரோல் மாடலாகக் கொண்டு : சூர்யவன்ஷியும் அவற்றைப் பின்பற்றினால் இந்திய கிரிக்கெட் உலகின் ஒரு சகாப்தமாக அவர் உருவெடுப்பார்” என்கிறார் தினேஷ் அகிரா.
உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கட்டும் இந்த இளஞ் சூர்யன்!
எழுதியவர்- கி.ச.திலீபன்

