பங்குச் சந்தை இறக்கத்தில் SIP-யை நிறுத்துவது புத்திசாலித்தனமா? இதனால் லாபம் கிடைக்குமா?

Spread the love

காய்கறி சந்தை: தக்காளி விலை 1 கிலோ ரூ.50… நீங்கள் ஒரு கிலோ தக்காளியை வாங்குகிறீர்கள்.

30 நாள்களுக்குப் பிறகு… தக்காளி விலை 1 கிலோ ரூ.25… ‘சூப்பர்’ என்று நினைத்து, நீங்கள் ஒரு கிலோ தக்காளிக்குப் பதிலாக 2 கிலோ தக்காளி வாங்குகிறீர்கள்.

பங்குச் சந்தை: ஒரு மியூச்சுவல் ஃபண்டின் என்.ஏ.வி ரூ.20. நீங்கள் 200 ரூபாய்க்கு 10 யூனிட் வாங்குகிறீர்கள்.

30 நாள்களுக்குப் பிறகு… அதே மியூச்சுவல் ஃபண்ட் என்.ஏ.வி ரூ.10. நீங்கள் 200 ரூபாய்க்கு 20 யூனிட்டுகளை வாங்கலாம். ஆனால், நீங்களோ, ‘அய்யய்யோ. என்.ஏ.வி பாதியாயிடுச்சே’ என்று மேற்கொண்டு வாங்காமலே இருந்துவிடுகிறீர்கள்.

காய்கறி விலை குறையும்போது இரண்டு மடங்கு அதிகம் வாங்குகிறோம். ஆடித் தள்ளுபடி என்றால் அடித்துப் பிடித்துப் போய் வாங்குகிறோம். ஆனால், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளின் என்.ஏ.வி மட்டும் குறையும்போது அதை நாம் வாங்காமலே விட்டுவிடுகிறோம். இது சரியா?

மியூச்சுவல் ஃபண்ட்
மியூச்சுவல் ஃபண்ட்

பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகளின் விலை குறையும் இன்னும் அதிகமான பணத்தைப் போட்டு அதை வாங்காமல் விட்டுவிடுவது முதலீட்டாளர்களின் பேசிக் சைக்காலஜியாக இருக்கிறது. இந்த சைக்காலஜிதான் கடந்த ஐந்து மாதங்களாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீட்டில் தெள்ளத் தெளிவாகப் பார்க்க முடிகிறது. இந்த ஆண்டின் தொடக்கம் முதலே எஸ்.ஐ.பி நிறுத்த ரேஷியா (SIP Stoppage Ratio) 100% என்கிற அளவில் இருக்கிறது. இந்த ரேஷியோ நமக்கு என்ன உணர்த்துகிறது? ஒரு மாதத்தில் எத்தனை எஸ்.ஐ.பி.கள் புதிதாகத் தொடங்கப்படுகின்றனவோ, அந்த அளவுக்குப் பழை எஸ்.ஐ.பி.கள் நிறுத்தப்படுகின்றன என்பதைத்தான் இந்த ரேஷியோ நமக்கு உணர்த்துகிறது.

கடந்த ஜனவரி மாதம் இந்த எஸ்.ஐ.பி நிறுத்த ரேஷியா 78 சதவிகிதமாக இருந்தது, பிப்ரவரியில் 85 சதவிகிதமாக உயர்ந்தது. மார்ச், ஏப்ரலில் இந்த ரேஷியோ தொடர்ந்து 100% என்கிற அளவில் இருந்தது; மே மாதத்தில் 95 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. அதாவது, 100 புதிய எஸ்.ஐ.பி.கள் தொடங்கப்பட்டால், 100 பழைய எஸ்.ஐ.பி.கள் நிறுத்தப்படுகின்றன.

முதலீடு

ஏற்கெனவெ செய்து எஸ்.ஐ.பி முதலீட்டை முதலீட்டாளர்கள் நிறுத்தக் காரணம் என்ன? முக்கியமான காரணம், ‘கடந்த இரண்டு வருஷமா எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்கிறேன். முதல் ஆண்டில் கொஞ்சம் லாபம் கிடைத்தது. ஆனால், இப்போது லாபம் குறைந்து, 15% நஷ்டத்தில் இருக்கிறேன். இப்போது எஸ்.ஐ.பி.யைத் தொடர்ந்தால், இன்னும் அதிகம் நஷ்டம் வருமே’ என்று நினைத்துத்தான் பலரும் எஸ்.ஐ.பி.யை நிறுத்துகிறார்கள். இப்படி நிறுத்தும் முதலீட்டாளர்கள் பெரும்பாலும் இரண்டு, மூன்று வருடங்களாகத்தான் எஸ்.ஐ.பி முதலீட்டை செய்து வருபவர்களாக இருப்பார்கள். எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்தால், நஷ்டமே வராது என்பதுதான் இந்தப் புதிய முதலீட்டாளர்களின் புரிதலாக உள்ளது.

பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்று வரும்போது, அது எஸ்.ஐ.பி முறையில் செய்யப்படும் முதலீடாக இருந்தாலும் சரி அல்லது மொத்தமாக செய்யப்படும் முதலீடாக இருந்தாலும் சரி, பங்குச் சந்தைகள் சரியாக செயல்படவில்லை எனில், முதலீடு செய்திருக்கும் பணம் 10% முதல் 20% வரை குறைவதற்கு வாய்ப்பு இருப்பதை யாரும் மறுக்க முடியாது! இந்த ஓர் உண்மையை முதலீட்டாளர்களுக்கு எடுத்துச் சொல்லாததினாலோ அல்லது இந்த முதலீடு இப்படித்தான் ஏறியிறங்கும் என்பது புரிந்துகொள்ளாதினால்தான் பலரும் எஸ்.ஐ.பி முதலீட்டை நிறுத்துகிறார்கள்.

பணம்
பணம்

இந்த சமயத்தில் எஸ்.ஐ.பி முதலீட்டை நிறுத்தாமல் இருந்தால் என்ன நடக்கும்? பங்குச் சந்தைப் புள்ளிகள் குறையக் குறைய மியூச்சுவல் ஃபண்டுகளின் என்.ஏ.வி.யும் குறையும். அப்போது நாம் செய்யும் முதலீட்டுக்குக் கூடுதலான எண்ணிக்கையில் ஃபண்டுகளின் யூனிட்டுகள் கிடைக்கும். அடுத்த சில மாதங்களில் பங்குச் சந்தை மீண்டும் உயரத் தொடங்கும்போது அதிகமான யூனிட்டுகள் நம்மிடம் இருக்கும் என்பதால், நமக்கு அதிகமான லாபம் கிடைக்கும்.

ஆனால், நம்மவர்களிடம் இருக்கும் மிகப் பெரிய பிரச்னையே தற்போது இறங்கியிருக்கும் பங்குச் சந்தைப் புள்ளிகள் மீண்டும் என்கிற நம்பிக்கையும் புரிதலும் இல்லாததுதான். 2008-ஆம் ஆண்டு அமெரிக்கப் பொருளாதாரப் பிரச்னையினால் 50% குறைந்த நம் பங்குச் சந்தை மீண்டும் உயரத்தான் செய்தது. 2016-ல் பணமதிப்பு நீக்கம் காரணமாக 20% இறங்கிய பங்குச் சந்தை மீண்டும் உயரத்தான் செய்தது. 2020-ல் கோவிட் பெருந்தொற்று காரணமாக 30% பங்குச் சந்தை மீண்டும் உயரத்தான் செய்தது. இப்படி கடந்த காலங்களில் 100 முறை நடந்திருக்கும்போது, இனிமேல் பங்குச் சந்தை உயரவே உயராது என்று எப்படி சொல்ல முடியும்? இந்த அவநம்பிக்கையே மிகப் பெரிய தவறான புரிதல்தானே!

இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள்

https://labham.money/events/webinar-jun14-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_jun14_2026 என்கிற லிங்க்கினை சொடுக்கி, தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளவும்….

இந்தத் தவறான புரிதலில் இருந்து விடுபட்டு, பங்குச் சந்தை மீண்டும் உயரும் என்கிற நம்பிக்கையில் ஒருவர் தொடர்ந்து எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்துவந்தால், பிற்பாடு மிக அதிகமான லாபத்தை நிச்சயம் சம்பாதிக்க முடியும்! அப்படி இல்லாமல், இப்போது எஸ்.ஐ.பி. முதலீட்டை நிறுத்தினால், நாம் மீண்டும் லாபம் சம்பாதிக்க நீண்ட நாட்கள் ஆகும். அல்லது, நஷ்டம் வந்துவிட்டது என்று நினைத்து, முதலீட்டை மொத்தமாக எடுத்துவிட்டால், நஷ்டம்தான் மிஞ்சும். இந்த நஷ்டத்தினால் மீண்டும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யவே மனம் வராது! இதனால் நல்லதொரு முதலீட்டை நாம் காலத்துக்கும் தவறவிட்டுவிடுவோம்!

எனவே, சந்தை இறங்கி இருக்கும் இந்த நிலையில், எஸ்.ஐ.பி முதலீட்டை நாம் நிறுத்தவே கூடாது! அப்படி செய்வது மிகப் பெரிய தவறு என்பதை உணர்ந்து, நம் எஸ்.ஐ.பி முதலீட்டைத் தொடரவேண்டும்!

மியூச்சுவல்   ஃபண்ட்   முதலீட்டு   ஆலோசனை   வேண்டுமா?

வெளிநாடு மற்றும் இந்தியாவில் வசிப்பவர்கள் தங்கள் முதலீட்டை சரியானபடி அமைத்துக்கொள்ள ஆலோசனை பெற, பின்வரும் லிங்கினைக் கிளிக் செய்து, தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளுங்கள்…

வெளிநாட்டில் வசிப்போருக்கு: https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-nri

இந்தியாவில் வசிப்போருக்கு: https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-vikatan-com

Labham Youtube Channel: www.youtube.com/@labham_money

Labham Website: https://labham.money/tamil

முதலீட்டாளர்களின் கவனத்துக்கு:

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. இதில் முதலீடு செய்யும்முன் திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாகப் படித்துப் பார்த்து, சுயமாக முடிவெடுக்க வேண்டுகிறோம்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *