ஜோக்ஸ்..!

Spread the love

ஜோக்ஸ்..!

“நம்ம தலைவருக்கு சந்தேகம் ஜாஸ்தின்னு எப்படிச் சொல்றே?”

“எதுக்காக மக்கள் நம்மை ஜெயிக்க வெச்சாங்கன்னு தெரிஞ்சுக்க ரகசியமா குழு அமைச்சிருக்காராம்!”

– என்.கே.பாலசுப்ரமணியன்

ஜோக்ஸ்..!

“சிஸ்டர் ஏதாச்சும் கேஸ் வந்தா உள்ள அனுப்புங்க…”

“டாக்டர் நேத்து நீங்க பண்ணின ஆபரேஷனுக்கு உங்க மேலதான் கேஸ் வந்திருக்கு…”

– ஆனந்தி ராமகிருஷ்ணன்

ஜோக்ஸ்..!

“ஆபரேஷன்ல என்ன பிரச்னை!?’’

“டாக்டர் ரீல்ஸ் எடுக்க மறந்துட்டாராம். அதனால மறுபடியும் பண்ணணுமாம்!’’

– தே.ராஜாசிங் ஜெயக்குமார்

“போருக்குப் புறப்படும் மன்னர் இரண்டு ஷூக்களை எடுத்துவைக்கிறாரே?”

“ஆமாம்… போகும்போது வாக்கிங் ஷூ, வரும் போது ரன்னிங் ஷூ!”

– கமலக்கண்ணன்.இரா

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *