“ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் நல்லவர்தான்; ஆனா…” – ல.ஜ.க-விலிருந்து விலகியது குறித்து தாடி பாலாஜி | actor thadi balaji opens up about why he left jose charles martin’s latchiya jananayaga katchi

Spread the love

தேர்தலுக்கு முன் லட்சிய ஜனநாயகக் கட்சியில் சேர்ந்த நடிகர் தாடி பாலாஜி, தற்போது அந்தக் கட்சியிலிருந்து வெளியேறி இருக்கிறார்.

ஆரம்பத்தில் திமுக அனுதாபி எனச் சொன்னார்கள். விஜய் கட்சி தொடங்கிய போது அவரது பெயரையெல்லாம் பச்சை குத்தினார். ஆனாலும் அங்கு என்ன சிக்கல்களை எதிர்கொண்டாரோ தெரியவில்லை, திடீரென சார்லஸ் மார்ட்டின் தொடங்கிய “லட்சிய ஜனநாயகக் கட்சி’யில் போய் சேர்ந்தார்.

கட்சியில் அவருக்கு மாநில அளவிலான பொறுப்பையும் வழங்கினார் சார்லஸ்.

இந்தச் சூழலில் அங்கிருந்தும் வெளியேறி இருக்கிற நிலையில், ‘என்ன நடந்தது’ என பாலாஜியையே தொடர்பு கொண்டு கேட்டோம்.

தாடி பாலாஜி

தாடி பாலாஜி

”தமிழருவி மணியன் சார் கொஞ்ச நாள் முன்னாடி அவரு கட்சியை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைச்சப்ப ‘பிரமாண்ட இணைப்பு’னு அதைக் கலாய்ச்சு சோஷியல் மீடியாவுல கமென்ட்டுகள் பறந்தன.. அந்த ரேஞ்சுக்கு என்னையும் கலாய்ச்சிருக்கிறதா நண்பர்கள் சிலர் சொன்னாங்க. நானே ஒரு காமெடி நடிகன். என்னை வச்சு காமெடியா? அப்படியே ஃபீல் ஆகி உட்கார்ந்துடுவேன் பாருங்க‌” என்றவரிடம், ‘சரி விஷயத்துக்கு வாங்க’ என்றோம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *