‘ஞானேஷ் குமாருக்கு எதிரான மாணவர் போராட்டத்துக்கு அனுமதி மறுத்த தமிழக போலீஸ்!’ – என்ன காரணம்? |Tamil Nadu Police Deny Permission for Student Protest Against Gyanesh Kumar – What’s the Reason?

Spread the love

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரியும் SIR க்கு எதிராகவும் டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சி, இடதுசாரி மாணவ அமைப்புகள் மூலம் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டிலும் ஞானேஷ் குமாருக்கு எதிராக இடதுசாரி மாணவ அமைப்புகளும் காக்ரோச் ஜனதா கட்சியினரும் போராட்டத்தில் இறங்க திட்டமிட்டிருந்தனர். ஆனால், தமிழக காவல்துறை அந்தப் போராட்டத்துக்கு அனுமதி வழங்க மறுத்திருக்கிறது. அனுமதி வழங்கப்படாததற்கான காரணம் என்ன?

ஞானேஷ் குமார்

ஞானேஷ் குமார்

காக்ரோச் ஜனதா கட்சி, SFI, AISF, DIYF போன்ற இடதுசாரி மாணவ அமைப்புகள் உட்பட 9 அமைப்புகள் ஒன்றிணைந்து எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே போராட திட்டமிட்டனர். நாளை (அக்.22) மாலை 4 மணி தொடங்கி அக்டோபர் 23 மாலை 4 மணி வரை என தொடர்ந்து 24 மணி நேரத்துக்கு போராட்டத்தை நடத்த முடிவெடுத்திருந்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *