`டயலாக் பேசிய முதல்வரே..!’ – 3 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்; கண்டனம் தெரிவிக்கும் தலைவர்கள் | Political leaders condemn 3-year-old killed after sexual assault in Gummidipoondi.

Spread the love

கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தக் கொடூரச் சம்பவத்திற்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க எம்.பி கனிமொழி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் குரல் கொடுத்திருந்தனர்.

அந்த வகையில் தற்போது அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

டயலாக் பேசிய முதல்வரே… இதுதான் அந்த மாற்றமா?

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, முட்புதரில் வீசப்பட்டு கொலை செய்யப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

தமிழகத்தில் எங்கே இருக்கிறது பெண்கள் பாதுகாப்பு?என்ன தான் செய்கிறது காவல்துறை? எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை? இதுபோன்று இன்னும் எத்தனை பெண்கள், சிறுமிகள் உங்களுடைய 6 மாத Trial Period முடியும் வரை பாதுகாப்பை இழந்து, உயிரை இழக்க வேண்டும்?

“அதிகாரிகளை நியமித்துவிட்டேன். இனிமே எல்லாம் மாறிவிடும்” என்று டயலாக் பேசிய முதல்வரே… இதுதான் அந்த மாற்றமா?

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *